நிறைய பேசுவோம்

Saturday, February 26, 2011

பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


துரையில் மிகவும் பிரபலமான மெட்ரிகுலேசன் பள்ளியில் K .G படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவு மற்றும் ஸ்நாக்ஸ் ஆகியவைகளை முதல் நாளே அவர்கள் நாட்குறிப்பில் இதுதான் கொண்டு வரவேண்டும் என்று எழுதி விட்டு விடுகின்றனர் .(உ.ம் ) கீரை சாதம் என்றால் அதைதான் அன்று கொண்டு வரவேண்டும் அது குழந்தைகளுக்கு பிடிக்குமா பிடிக்காதா என்பதை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை . ஆனால் கவலை படவேண்டிய பெற்றோரும்  பள்ளியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு அதையே கொடுத்து விடுகின்றனர் ஆனால் குழந்தைகள் தான் பாவம் சரியாக சாப்பிடாமல்  பிடித்ததை சாப்பிடாமல் எப்படி படிக்க முடியும் . மேலும் தினமும் சரியாக சாப்பிடாமல் குழந்தைகள்  வீட்டுக்கு வருகின்றனர் உடல் நலம் பாதிப்பும் ஏற்படுகிறது .பள்ளியில் சென்று ஒரு சில பெற்றோர்கள் கேட்டபோது இது பள்ளியின் விதி முறைகள் என்று சொல்லியுள்ளனர் . இது விதி முறையா அல்லது குழந்தைகளின் விதியா தெரியவில்லை . அங்கு படித்தால் குழந்தைகள் நன்றாக படிக்கும் ஆங்கிலம் பேசும் என்பது பெற்றோர்களின் நம்பிக்கை என்ன செய்வது .



இது என் வீட்டுக்கு அருகில் உள்ள குழந்தைக்கு ஏற்பட்ட அனுபவம் ..



குழந்தைகள் நன்றாக படித்தால் மட்டும் போதாது நல்ல ஆரோக்கியத்துடனும்  இருக்க வேண்டும் இதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை ..


4 comments:

Unknown said...

இது நல்ல விஷயம்தான். எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி உணவு உண்பதால் பாராபட்சம் இருக்காது. பிடிக்காத உணவுகளையும் உண்ண பழகிகொள்கிறது.

தமிழ்வாசி பிரகாஷ் said...

///இது விதி முறையா அல்லது குழந்தைகளின் விதியா தெரியவில்லை . அங்கு படித்தால் குழந்தைகள் நன்றாக படிக்கும் ஆங்கிலம் பேசும் என்பது பெற்றோர்களின் நம்பிக்கை என்ன செய்வது .///

எல்லாம் ஆங்கில மோகம்

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

சேக்காளி said...

வியாபாரிகளுக்குத்தான் குழந்தைகளாய் தெரியாமல் போகின்றது என்றால் பெற்றோர்களும் அதற்கு துணை போவது குழந்தைகளின் போதாத காலம் தான்.மேற்கொண்டு கேள்வி எழுப்பினால் மதிய உணவு மட்டும் தானே அப்படி.மற்ற நேரங்களில் வீட்டில் தானே சாப்பிடுகிறார்கள்.அப்போது குழந்தைகளுக்கு பிடித்ததை கொடுங்கள் என்று பதில் வரும்.சமத்துவ சமுதாயம் வளருகிறது என எண்ணிக்கொண்டு போக வேண்டியதுதான்.

Ambika Krishnan said...

its ofcourse a gud practice. the child wil take d vegetables out of compulsion atleast na.