இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
பள்ளி மாணவிகளை ஜாலி டூர் அழைத்து சென்ற வாலிபர்கள்
இந்த தலைப்பில் பத்திரிக்கையில் வந்த செய்தியை பார்த்தவுடன் சரி +2 படிக்கும் மாணவியை பற்றிய செய்தியாக இருக்கும் என்று எண்ணி படிக்க ஆரம்பித்தேன். ஆனால் படித்த போதுதான் அதிர்ச்சி காத்திருந்தது அந்த செய்தி இதுதான். விடுதியில் தங்கி ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியரிடம் மொபைல் போனில் பேசி பேசி அவர்களை தனியாக பாண்டிசேரி வரை இரண்டு வாலிபர்கள் அழைத்து சென்றுள்ளனர் மாணவியரை தேடிய பள்ளி நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. போலீசார் மாணவியரிடம் இருந்த மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு தேடி கண்டு பிடித்துள்ளனர் மறுநாள் காலையில் பஸ் நிலையைத்தில் நின்று கொண்டிருந்த மாணவியரை போலீசார் அழைத்து விசாரித்த போது மொபைல் போன் மூலம் தங்களுக்கு பாய் பிரண்டுகள் பழக்கம் ஏற்பட்டதாகவும் அவர்கள் அழைத்ததால் பாண்டிச்சேரிக்கு ஜாலியாக டூர் சென்று திரும்பியதாக தெரிவித்தனர் இதை கேட்ட போலீசாரும் அதிர்ந்தனர். நமக்கும் அந்த அதிர்ச்சிதான்? . இப்போது நான் உங்கள் முன் வைக்கும் கேள்விகள் சில. சிறு வயது பள்ளி மாணவியர்கள் மொபைல் போன் பயன் படுத்துவது சரியா. பெற்றோர்களே பிள்ளைகளுக்கு மொபைல் போன் வாங்கி கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். இதனால் எவ்வளவு ஆபத்து என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.
அதுவும் பெண் குழந்தைகளுக்கு மொபைல் போன் வாங்கி கொடுப்பதை தவிருங்கள் கல்லுரி படிக்கும் மாணவிகளுக்கு எது சரி தவறு என்று தெரியும் ஆணால் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு வாங்கி கொடுத்தால் இது போன்ற விளைவுகள் கண்டிப்பாக நடக்கும் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும் இந்த விசயத்தில் பள்ளிகளும் மொபைல் போன் உபயோகிப்பதை அனுமதிக்க கூடாது .இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க என்ன செயலாம் நீங்கள் சொல்லுங்கள் ..
3 comments:
Luring underage girls or boys is unpunishable crime in most of the countries... ஆனால் நம் நாட்டில் ஒரு மண்ணும் இல்லை.. கேவலம்பிடித்த கருமாந்த பயலுகள் !!!
தொழில்நுட்ப வளர்ச்சி சிறு பெண்களையும் வளர விட்டுடுது..
சென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ
அதிர்ச்சியா இருக்கே..!!!!!!!!!
Post a Comment