நிறைய பேசுவோம்

Monday, March 7, 2011

சிறுகதை : காதல் செய்யும் மாயம் .. - பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
 சிறுகதை : காதல் செய்யும் மாயம் .. - பிரபாஷ்கரன்

சிவா கத்திக் கொண்டிருந்தான..

.' 'என்னம்மா பொண்ணு இவ நாம் படிக்க வைத்து வேலைக்கு அனுப்பியது கண்டவனையும் லவ் பண்ணவா..... என்ன நினைசிட்டுருக்கா இவ மனசில தங்கச்சின்னு கூட பார்க்க மாட்டேன்... வெட்டி போட்டுடுவேன் ....'  நம்ம சாதி சனம் என்ன பேசும்.... 
 
            அப்போது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கரி..  சிவாவின் மனைவி கல்யாணம் ஆகி இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. ஒரே சாதியில் நடந்த திருமணம்....'

        '' என்ன இவன் கூட பிறந்த தங்கையின் மனதை புரிந்து கொள்ளாமல் இப்படி பேசுகிறானே மனதில் நினைத்துக் கொண்டாள்.
        உள்ளே சிவாவின் தங்கை அழுது கொண்டிருந்தாள். அப்போது சங்கரி உள்ளே வந்தாள்..

     அண்ணியை பார்த்தவுடன் கண்களை துடைத்து கொண்டாள். 

    '' அழாதே கண்ணை துடைச்சுக்கோ...காதலிக்கறது தப்பில்லை அதை அடைய போராட தெரியனும்...' அப்பதான் காதல் ஜெய்க்கும்....கவலைபடாதே நீ உள்ளே போ உங்க அண்ணன் வரார்...      

        உள்ளே வந்த சிவாவிடம் என்னங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்றாள்  சங்கரி....
       '' என்ன ...'' என்பது போல் பார்த்தான்.
        '' ஏங்க நான் உங்ககிட்ட ஒரு உண்மையை சொல்லணும்.. நம் திருமணத்திற்கு  முன்னாடியே நான் ஒருத்தரை லவ் பண்ணினேன். அவரும் என்னை விரும்பினார். ஆனால் எங்கள் வீட்டில் ஒத்து கொள்ளாமல் உங்களுக்கு  கல்யாணம் செய்து வச்சுட்டாங்க. எனக்கும் வீட்டில் எதிர்த்து போராட முடியாமல் உங்களை கல்யாணம் செய்துகிட்டேன்.
   
   கேட்ட அவனின் பார்வையில் உக்ரம் தெரிந்தது.
 '' காதல்னா எதுவரைக்கும் பழகினிங்க.. வேற என்ன நடந்தது... வயித்தை கழுவிட்டு எனக்கு மனைவி ஆகலையே.. என்னை ஏமாத்திட்டியேடி ...'' அவனின் வக்கிரமான பேச்சுக்கள் அவளை தாக்கின..
  
    சிரித்தாள் சங்கரி..  '' வெல் சிவா.. எப்படி கேவலமா பேசுறிங்க...'' இதே நிலமை... உங்க தங்கைக்கு  வராதுன்னு என்ன நிச்சயம்  நீங்கள் பார்க்கும் மாப்பிள்ளை மட்டும் எப்படி சம்மதிப்பான் அவரும் உங்களை மாதிரி சராசரி ஆம்பிளையா இருந்தா ....  நாளைக்கு உங்க தங்கச்சி காதல் விவகாரம் தெரிந்து அவளை வீட்டிற்கு அனுப்பிட்டா...
  
        சிவாவிற்கு நெற்றி பொட்டில் அடித்தது போல் இருந்தது ... ''ஆம்...நம் தங்கை கண்டிப்பாக வரப்போகும் கணவனிடம் அவள் காதலை பற்றி சொல்லிவிடுவாள் ... வரப்போறவன்  எப்படி இருப்பானோ ... சங்கரி சொல்வதும் சரிதான்.. அவள் விருப்பபடி செயதால் சந்தோசமாக இருப்பாள்..என்ற எண்ணத்துடன் அவன் தங்கையை பார்த்தான்