நிறைய பேசுவோம்

Saturday, June 25, 2011

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் காதலனுடன் சுற்றிய மாணவி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்



Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

இந்த செய்தி தினமலரில் வெளிவந்த செய்திதான் அதை அப்படியே இங்கு கொடுத்துளேன் .தயவு செய்து படித்து பாருங்கள் கல்லூரி விடுதியை விட்டு காதலனுடன் வெளியே வந்து இரவு முழுதும் சுற்றியுள்ளார் இளம் பெண்   மேலும் ஹோடேலில் ரூம் போட்டு தங்கவும் திட்டமிட்டுள்ளனர் பின் நடந்த சம்பவங்களை பாருங்கள் பெற்றோர்களை ஏமாற்றுவதோடு இல்லாமல் அவமான படுத்தும் இது போன்ற ஒரு சில இளைய தலைமுறையினரை என்ன செய்வது .. இந்த சம்பவத்தை படிக்கும் இளைய சமுதாயத்தினர் பெற்றோரை நினைத்து பாருங்கள் .பெற்றோர்களே நீங்களும் உங்கள் பிள்ளைகளையும் அவர்களின் நண்பர்களையும் கவனியுங்கள் ..

செய்தி தினமலர் -நன்றி 

திருச்சி: திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் காதலனுடன் சுற்றிய மாணவி நேற்று முன்தினம் இரவு கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த முனியாண்டி மகள் பரணி (19). இவர், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஒரு கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவருடன் கரூரை சேர்ந்த ஒரு மாணவியும் படித்து வருகிறார்.கரூர் மாணவிக்கு அவரது குடும்பத்தினர் ஃபோனில் பேசும்போது, பரணியிடமும் பேசி வந்துள்ளனர். கரூர் மாணவியின் அண்ணன் ஜெயகாந்தனுக்கும், பரணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலிக்கத் துவங்கினர்.நேற்று முன்தினம் (ஜூன் 24) ஈரோட்டிலிருந்து புறப்பட்ட மாணவி பரணி, கரூர் வந்ததும் ஜெயகாந்தனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஜெயகாந்தன், அவரை திருச்சி அழைத்து வந்தார். இரவு வெகு நேரமானதால், லாட்ஜில் தங்கிவிட்டு காலை செல்ல திட்டமிட்டனர்.ஆனால், எந்த லாட்ஜிலும் அவர்களுக்கு "ரூம்' தர மறுத்துவிட்டனர். இதனால், காதல் ஜோடிகள் பஸ் ஸ்டாண்டை வலம் வந்தனர். இதை நீண்ட நேரம் ஒரு கும்பல் நோட்டமிட்டு வந்தது. திடீரென இரண்டு பேர், தங்களை போலீஸ் எனக் கூறி ஜெயகாந்தனை மிரட்டினர்."இந்த பெண்ணை கடத்திக் கொண்டு வந்தாயா?' என கேட்டதும் ஜெயகாந்தன் விழித்தார். மாணவியை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் செல்வதாக கூறி, பரணியை அடையாளம் தெரியாத காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டனர். 

இதனால், அதிர்ச்சியடைந்த ஜெயகாந்தன், புறக்காவல் நிலையம் மூலம் கண்டோன்மென்ட் போலீஸாரிடம் புகார் தெரிவித்தார்.போலீஸார் பஸ் ஸ்டாண்டு சென்று விசாரித்ததில், "டிராவல்ஸ் நிறுவன டிரைவர்கள் தான் மாணவி பரணியை கடத்திச் சென்றுள்ளனர்' என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர்.இதற்கிடையே, போலீஸார் தங்களுக்கு வலை விரித்துள்ளதை தெரிந்து கொண்ட அந்த கடத்தல் கும்பல், மாணவி பரணியை புதுக்கோட்டையில் இறக்கிவிட்டுச் தப்பிச் சென்றது. இதுபற்றி மாணவி பரணி, காதலன் ஜெயகாந்தனுக்கு ஃபோனில் தகவல் தெரிவித்தார்.கண்டோன்மென்ட் போலீஸார் அங்கு சென்று மாணவியை மீட்டு வந்தனர். கடத்தலில் ஈடுபட்ட டிராவல்ஸ் நிறுவன டிரைவர்களை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.



Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

1 comment:

நிரூபன் said...

பெற்றோருக்குத் தெரியாமல் ஊர் சுற்ற நினைப்பதாலும்,
ஒரே நேரத்தில் இரு நபர்களுக்கு கடலை போடுவதாலும் வரும் எதிர் வினை தான் இது..

பல இளையோருக்கு இந்தச் செய்தி ஒரு விழிப்புணர்வாக, அறிவுரையாக அமையும் என்பதில் ஐயமில்லை.