நிறைய பேசுவோம்

Saturday, March 19, 2011

சிறுகதை : சுயநலம் .. பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

"என்னங்க ஐம்பது பவுன் நகை போடுறேன் கையில் ஒரு லட்சம் தரேன்னு சொல்றாங்க .. நீங்க என்னடான்னா இந்த சம்பந்தம் வேண்டாம்னு சொல்றீங்க .."
கணவனிடம் புலம்பினால் ஜானகி ..

"இல்ல ஜானகி .நாம் அந்த சம்பந்தத்தையே முடிச்சிடலாம் " சொன்னார் ராமன்

"என்னங்க 20 பவுன் போடறதா சொன்ன அந்த இடமா வசதி ரொம்ப கம்மிங்க சொன்னாள் " ஜானகி  

"அவங்க 20 பவுன்தான் போடறாங்க ஆனால் பொண்ணு நல்ல படிச்சிருக்கு இன்னிக்கி சாப்ட்வேர்ல் வேலை பார்க்குது நாளைக்கு லட்ச கணக்கில் சம்பாதிக்கும் இந்த 50 பவுன் எல்லாம் கல்யாணத்தோடு போயிடும் ஆனால்    வாழ்க்கை முழுவதும் சம்பாதித்து போடுவாள் அந்த பெண் .."

சொல்லிக்கொண்டே போகும் கணவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் ஜானகி 


3 comments:

நிரூபன் said...

வணக்கம் சகோதரா, இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை எனும் நிலையில் சித்திரிக்கப்படும் மனைவியையும், தூர நோக்கில் சிந்திக்கும் கணவனையும் கதையில் காட்டியிருந்தாலும், இருவரின் நோக்கமுமே சுயநலம் சார்ந்தது என்பதை தலைப்பால் உணர்த்தி விட்டீர்கள்.

பிரபாஷ்கரன் said...

தங்கள் கருத்துக்கு நன்றி

Ambika said...

2day every1 thinks lik tat only. nalla yadharthamana kadhai.