நிறைய பேசுவோம்

Wednesday, June 29, 2011

மதுரை கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் சேர்க்கை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

மதுரை கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் சேர்க்கை ஒவ்வொரு பாட பிரிவிற்கும் ரத்து செய்யபட்டுள்ளதாக தெரிகிறது .உண்மையில் இது வரவேற்க பட வேண்டிய விஷயம் .முற்றிலும் சுயநிதியாக இயங்கும் கலை கல்லூரிகள் மாணவர் சேர்க்கை இல்லாமல் தவித்து வருகின்றனர் ஆனால் ஏற்கனவே அரசு உதவி பெரும் கல்லூரிகள் சுய நிதி பாட பிரிவு என்று ஒன்றை துவக்கி அதில் ஏராளமான மாணவர்களை சேர்த்து வருகின்றனர் ஒரே பாட பிரிவிற்கு இரண்டு பாட பிரிவுகள் என்று இதில் கூடுதல் இடங்கள் வேறு கொடுத்தால் கேட்கவா வேண்டும் அவர்கள் சம்பாதிப்பதற்கு .முற்றிலும் சுயநிதியாக இயங்கும் கல்லூரிகள் என்ன செய்யும். யோசிக்க வேண்டும் .மேலும் இன்று அரசு உதவி பெரும் சயநிதி கல்லூரிகளில் காணப்படும் வான் உயர்ந்த கட்டிடங்கள் எல்லாம் சுயநிதி பிரிவில் வந்த காசுதான் ஆனால் அதற்காக உழைக்கும் ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகமாக கொடுக்கிரார்களா என்றால் இல்லை பாவம் அவர்கள் .முற்றிலும் சுயநிதி கல்லூரிகளில் ஆசிரியர்களின் நிலைமை ரொம்ப மோசம் இதை எல்லாம் எந்த அரசாங்கமும் சரி பல்கலைகழகமும் சரி கண்டு கொள்வதில்லை .பொறிஇயல் கல் லூரிகளிலாவது ஆசிரியரின் சம்பளம் எவ்வளவு என்று AICTE  கேட்கிறது இங்கு கலை கல்லூரிகளில் ஆசிரியரின் சம்பளம் பற்றி கவலை பட யாரும் இல்லை 

1 comment:

நிரூபன் said...

வரவேற்கத் தக்க விடயம் பாஸ், அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி கிடைக்க இம் முறையானது வழிவகுக்கும்.