நிறைய பேசுவோம்
Monday, October 21, 2024
Tuesday, October 15, 2024
சின்னகதையை சூப்பரா சொல்லியுள்ளார்
Saturday, October 12, 2024
Friday, October 11, 2024
போரடிச்சா பார்க்கலாம்.
Tuesday, October 8, 2024
புதுப்பட்டி கத்தரிக்காய் சித்தர்
பி.கு. டீ சாப்பிட்டே ஆக வேண்டும் என்று சொல்லி மாஸ்டரிடம் டீ போட சொல்லி சாப்பிட வைத்துதான் அனுப்பினார்.
அன்பு எப்போதுமே பெரிது அதுவும் நம் மாணவர்களின் அன்பு கொஞ்சம் கூடுதல் இனிமையான சுவாமி தரிசனத்துடன் இந்த சந்திப்பும் இனிமையாகத்தான் இருந்தது
வித்தியாசமான படம்
Sunday, October 6, 2024
வேட்டையன் சூப்பர் ஹிட்
Wednesday, October 2, 2024
நல்ல ஒரு அழுத்தமான கதை
Friday, September 27, 2024
Thursday, September 26, 2024
சூர்யா சனிக்கிழமை
கொட்டுக்காளி
மிக சொற்ப செலவில் படமெடுத்து சூரியின் மார்க்கெட்டை வைத்து லாபம் பார்க்க நினைத்திருக்கிறார் தயாரிப்பாளர் என்னதான் படத்தில் இருக்கிறது என்று ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள் அதுக்குன்னா உச்சா அடிப்பதையெல்லாம் க்லோசப்பில் காட்டுவது ஒவர் முடிவை நாமதான் தீர்மானிக்கனும் போல சொல்லிக் கொள்ளும்படியில்லை படம்..
Tuesday, September 24, 2024
கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்துக்களை கிண்டலடித்து இந்து கடவுள்களை கிண்டலடித்து பணமும் சம்பாதித்து கொள்வதும் இந்துக்களே. மற்ற மதத்தினரை பாராட்டத்தான் வேண்டும் அவர்களையோ அவர்களின் கடவுள்களையோ எதுவும் சொல்வதில்லை அவர்கள் ,இந்த விசயத்தில் அவர்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.
Monday, September 23, 2024
தவறு
தன்னால் மட்டுமே. எல்லாம். முடியும். என்று நினைப்பதும் தவறு தன்னால்தான் எல்லாம் நடந்தது என்றும் நினைப்பதும் தவறு
Sunday, September 22, 2024
எல்லாமே சரி
கொஞ்சம் பிரபலமானா அவங்க எழுதுவது பேசுவது எல்லாமே சரின்னு நம்பும் ஒரு கூட்டம் இருக்கும் வரை நாம் ஒன்றும் செய்ய முடியாது..
Saturday, September 21, 2024
டேய் உன் ஆளு
Wednesday, September 18, 2024
இல்லத்தரசி
சென்ற வார நீயா நானாவில் இல்லத்தரசியாக இருப்பதே என் விருப்பம் என்று சொன்ன பெண் மீது பலர் காட்டமா இருப்பது போல் தெரிகிறது அது அவரின் விருப்பம் அப்படி அமைவதும் வரம் அதை வேண்டி பலரும் இருக்கலாம். உண்மையா மனதில் பட்டதை பேசிய அவருக்கு வாழ்த்துகள்.
Tuesday, September 17, 2024
வித்தியாசமானவைதான்
நேற்று பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அலங்காநல்லூர் வரை பேருந்து பயணம் மகளிருக்கு இலவச பேருந்து அதனால் பேருந்தில் சொற்ப ஆண்களே.. எனக்கு அருகில் ஒரு வயதான பெண்மணி அமர்ந்து கொண்டார் பெண்கள் கூட்டம் ஒவ்வொரு நிறுத்தத்திலும் அதிகம் பேர் எற ஒரு பெண்மணி இன்னெருவரை இடித்து விட என்ன எருமை மாடு மாதிரி இடிக்கிறே அவர் சொல்ல இவர் ஏன் உன் வீட்ல ஆன்பள எருமை மாடு மாதிரி உன் மேல விழுவானே அப்பல்லாம் இனிக்குமா.. பதிலுக்கு அந்த பெண் ஏதோ சொல்ல ஆரம்பிக்க எல்லா பெண்களும் வேடிக்கைதான் பார்த்தனர் ..ஏன் தனி பஸ்ல வரது இடிபடமா சேர் ஆட்டோவில் காசு கொடுத்து போறது இப்படியே பேச்சு நீள மொபைல் ஹெட்போனை காதில் சொருகிக் கொண்டேன் ஆன்லன் எப்ம்மில் இளையராஜா பாட்டு அலங்காநல்லூர் சேரும் வரை.
Monday, September 16, 2024
Thursday, September 12, 2024
Wednesday, September 11, 2024
உசாராயிருங்கள்
மதுரையில் உள்ள பிரபல துணிக்கடையில் ஆடித தள்ளுபடியில் துணி வாங்கிய போது கூப்பன் வழங்கி.னர் .அதாவது அடுத்த மாதம் வாங்கும் போது செல்லும் 1500 க்கு 250 என்று பல கூப்பன்கள் ஆனால் வேடிக்கை என்னவென்றால் இப்போது வாங்க சென்றால் எல்லா துணி ராகங்களுக்கும்செல்லாது குறிப்பிட்ட ரகங்களுக்கு மட்டும். என்ன ஏமாற்று வேலை உசாராயிருங்கள்
Tuesday, September 10, 2024
மகா அபத்தம்
மகாவிஷ்னு பேசியதில் பெரிய அபத்தம் போன ஜென்மம் அடுத்த ஜென்மம் என்று பேசியது போன ஜென்மத்தின் பாவம் இந்த ஜென்மத்தில் குறையோட பிறந்துள்ளார்கள் என்று சொன்னால் அந்த பிள்ளைகளை பெற்ற பெற்றொர்கள் எவ்வளவு வருத்தப்படுவர் மற்றவரின் பார்வை அவர்கள் மேல் எப்படி இருக்கும். அசால்டா ஒரு தவறான கருத்தை பரப்பியிருக்கிறார். இப்ப செய்யும் பாவத்திற்கு அடுத்த ஜென்மத்தில் தண்டனைன்னா கேட்பானா எவனாச்சும் அதற்கெல்லாம் சான்று இருக்கா அவர் பேசிய உரையின் தலைப்பு என்ன தெரியல தன்னம்பிக்கை பேச்சா ஆன்மீக பேச்சா.. எதுவாயினும் தவறான கருத்து நீ பாவம் செய்தால் நீ இப்போது வாழும் போதே தண்டனை கிடைக்கும் என்றால் பயப்படுவான் அதோடு நிறுத்தியிருந்தால் வேறு மாதிரி விமர்சனங்கள் வந்திருக்கும்.ஒரு பேச்சாளரை பேச அழைக்கும் போது அவர் எதைப்பற்றி பேசுவார் அல்லது எதைப் பேச வேண்டும் என்று அமைப்பாளர்களுக்கு தெரியாதா.கடைசியில் இதுவும் அவருக்கு விளம்பரமாகித்தான் போயிருக்கு என்று நினைக்கிறேன். நிகழ்ச்சி நடக்கும்ப்போதோ அல்லது சில மணி நேரங்களில் வைரல் ஆனது எப்படி வைரல் ஆனதா ஆக்கப்பட்டதா.. என்னமோ போடா மாதவா ஒன்னுமே புரிய மாட்டேங்குது.