நிறைய பேசுவோம்

Tuesday, October 8, 2024

புதுப்பட்டி கத்தரிக்காய் சித்தர்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

நேற்று மஹாளய பட்ச அமாவாசை முன்னிட்டு என் சகலை அவர்கள் கட்டியுள்ள புதுப்பட்டி கத்தரிக்காய் சித்தர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றேன் அன்னதானம் சிறப்பாக நடை பெற்றது திரும்பி வரும்போது அலங்கா நல்லூரில் பால் பன் வேண்டும் என அனைவரும் கேட்க காரை நிறுத்தி விட்டு மாப்பிள்ளை இறங்கி அந்த பக்கம் கடையில் வாங்க சென்றார் காரில் அமர்ந்திருந்த என்னை பார்த்து கடைக்காரார் ஏதோ பேச எனக்கு புரியல அப்போ போன் செய்து அங்க்கிள் உங்க ஸ்டுடண்டா என்று சொல்லவும் இறங்கி கடைக்கு சென்றேன். சார் நான்கார்த்திக் சார் ஐடி படித்தேன் என்றார் பேஷ்ப்புக்கில் நான் எழுதுவது எல்லாமே படிப்பதாகவும் இடையில் ஒரு முறை மெசஞ்சரில் நம்பர் வாங்கியதை குறிப்பிட்டார் பங்கு சந்தை பற்றி பேசனும் என்றார். தாராளமா வீட்டிற்கு போன் செய்து விட்டு வரும்படி முகவரி கொடுத்தேன். நம் முந்நாள் மாணவர்களை சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சிதான்.மகிழ்ச்சிகள் தொடரட்டும்.
பி.கு. டீ சாப்பிட்டே ஆக வேண்டும் என்று சொல்லி மாஸ்டரிடம் டீ போட சொல்லி சாப்பிட வைத்துதான் அனுப்பினார்.
அன்பு எப்போதுமே பெரிது அதுவும் நம் மாணவர்களின் அன்பு கொஞ்சம் கூடுதல் இனிமையான சுவாமி தரிசனத்துடன் இந்த சந்திப்பும் இனிமையாகத்தான் இருந்தது
 

No comments: