நிறைய பேசுவோம்

Tuesday, September 17, 2024

வித்தியாசமானவைதான்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

 நேற்று பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அலங்காநல்லூர் வரை பேருந்து பயணம் மகளிருக்கு இலவச பேருந்து அதனால் பேருந்தில் சொற்ப ஆண்களே.. எனக்கு அருகில் ஒரு வயதான பெண்மணி அமர்ந்து கொண்டார் பெண்கள் கூட்டம் ஒவ்வொரு நிறுத்தத்திலும் அதிகம் பேர் எற ஒரு பெண்மணி இன்னெருவரை இடித்து விட என்ன எருமை மாடு மாதிரி இடிக்கிறே அவர் சொல்ல இவர் ஏன் உன் வீட்ல ஆன்பள எருமை மாடு மாதிரி உன் மேல விழுவானே அப்பல்லாம் இனிக்குமா.. பதிலுக்கு அந்த பெண் ஏதோ சொல்ல ஆரம்பிக்க எல்லா பெண்களும் வேடிக்கைதான் பார்த்தனர் ..ஏன் தனி பஸ்ல வரது இடிபடமா சேர் ஆட்டோவில் காசு கொடுத்து போறது இப்படியே பேச்சு நீள மொபைல் ஹெட்போனை காதில் சொருகிக் கொண்டேன் ஆன்லன் எப்ம்மில் இளையராஜா பாட்டு அலங்காநல்லூர் சேரும் வரை.

C

No comments: