நிறைய பேசுவோம்

Wednesday, April 6, 2011

கவிதை : ஜெயித்தது காதல் .. என்பதாலா..-பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

நீ.. 
இமைகளை ...
விசிறியபோது..
படபடத்தது 
என்
இதயம் 
உன் 
புன்னகை 
வீசிய 
தென்றலில் 
பறந்து போனது 
என் இதயம்
உன் 
பாதம் பட்ட
இடங்களில் 
தொலைந்தது 
போனது 
என்
பார்வைகள் 
நீ ..
போகும் 
இடமெல்லாம் 
ஓடி .
வந்தது 
என் மனது 
நிஜமாகும் 
என்று ..
நான் நினைத்த 
நினைவுகள் 
எல்லாம் ..
உன் ..
நினைவாகவே 
இருப்பதன் ..
காரணம் ..
ஜெயித்தது 
காதல் ..
என்பதாலா..



10 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

அஞ்சலி படத்தை போட்டு கவிதையை படிக்க விடாம பண்ணிட்டிங்களே

நிரூபன் said...

நீ..
இமைகளை ...
விசிறியபோது..
படபடத்தது//

இமைகளுக்கு இந்தளவு சக்தியா...

நம்பவே முடியவில்லை...

காதலியின் பார்வைகளை இங்கே படபடக்கும் இதயத்தை விளிக்கப் பயன்படுத்தியுள்ளீர்கள்.

நிரூபன் said...

புன்னகை
வீசிய
தென்றலில்
பறந்து போனது
என் இதயம்
உன்//

புன்னகையில் மனதைத் தொலைத்த நினைவுகளை அழகாக கோர்த்திருக்கிறீர்கள்.

நிரூபன் said...

பாதம் பட்ட
இடங்களில்
தொலைந்தது
போனது
என்
பார்வைகள்//

இது எல்லோருக்கும் ஏற்படும் யதார்த்தமான நிகழ்வு,, அதனையும் அழகுறவே சொல்லுகிறீர்கள்.

நிரூபன் said...

நிஜமாகும்
என்று ..
நான் நினைத்த
நினைவுகள்
எல்லாம் ..
உன் ..
நினைவாகவே
இருப்பதன் ..
காரணம் ..
ஜெயித்தது
காதல் ..
என்பதாலா..//

மிக மிக அழகாக காதலியின் செயல்களையும், காதல் வசப்பட்ட உள்ளத்தின் இயல்புகளையும் வர்ணித்து விட்டு, இறுதி வரிகளில் ஒரு திருப்பு முனை, மனதிற்கு ஒரு நெருடலைக் கவிதையில் கொடுத்துள்ளீர்கள்..

காதலர்கள் வெல்லவில்லை.. காதல் மட்டும் தான் வென்று விட்டது..

ஜெயித்தது காதல்- ஒரு தலைக் காதலின் நினைவுகளை காதலியின் நடவடிக்கைகள் எனும் வர்ணணைகளினூடாகப் பாடிச் செல்லும் ஒரு யதார்த்தக் கவிதை...

நிரூபன் said...

முதன் முதலாய் உங்கள் வலையில் ஒரு பெரிய கவிதை படித்த சந்தோசம்.

Prabashkaran Welcomes said...

/அஞ்சலி படத்தை போட்டு கவிதையை படிக்க விடாம பண்ணிட்டிங்களே/

அஞ்சலிய மட்டும் பார்க்காம கவிதையும் படிங்க -பிரபாஷ்கரன்

Prabashkaran Welcomes said...

நிரூபன் தொடர்ந்து விமர்சனம் செய்யுங்கள் நன்றி
-பிரபாஷ்கரன்

Ambika Krishnan said...

Finishing super pa! Romba poetic ah iruku. Comment pana varthaiye kidaikala ponga.

பிரபாஷ்கரன் said...

/Finishing super pa! Romba poetic ah iruku. Comment pana varthaiye kidaikala ponga.-Ambika /
உங்கள் விமர்சனங்கள் நல்ல கவிதையை உருவாக்கும் நன்றி --பிரபாஷ்கரன்