நிறைய பேசுவோம்

Monday, June 6, 2011

கவிதை : உன் கைகள் என்னை .. தீண்டும் போது - பிரபாஷ்கரன்





உன் ..
முகம் பார்க்க
தவமிருந்தேன்

நீ. 
என் விரல் 
பற்றிய போது 
முகம் சிவந்தது 

உன் கைகள் 
என்னை ..
தீண்டிய  போது
வயிற்றில் ..
ஜில்லென்ற 
ஐஸ் கட்டி 
பரவியது

நீ ..
முத்தமிட 
வந்த போது 
என் ..
இமைகளும் 
வெட்கத்தில்  
மூடி கொண்டது 

உன் தோளில் 
முகம் ..
சாய்க்கும் 
வேளையில் 
பறந்தது  பட்டம் பூச்சிகள்
என் உடலெங்கும் 

என்ன விலை 
தந்தும் 
பெற ஏங்குகிறேன் 
உன் காதலை ..

கனவில் மட்டும் 
வரும் ..
என் காதலனே 
நினைவில் ..
என்று ..
நீ வரப் போகிறாய்






Sunday, June 5, 2011

ஹீரோ ஆகப்போகும் ஜூனியர் கேப்டன் விஜயகாந்த்






கேப்டன் விஜயகாந்த் இன் இளைய மகன் ஷண்முக பாண்டியன் சினிமா வில் ஹீரோ ஆகப்போகிறாராம் +2 முடித்த அவர் இதற்காக நடனம் போன்ற பயிற்சிகள் எடுக்க ஆரபித்து விட்டார் .மனைவி பிரேமலதா தன் மகன் நடிபதற்கு நல்ல கதை தேடி வருகிறார் .இம் ஜூனியர் கேப்டன் யை வாழ்த்து வோம் 





இததான் கலைஞர் கூடா நட்பு என்று சொன்னாரோ




இந்த படத்தை பார்த்தா மன்மோகன் என்ன சொல்ல வருகிறார்னு புரியலை . ஒருவேளை அவரும் இரட்டை இலை சின்னத்தை காண்பிகிறாரோ . இததான் கலைஞர் கூடா நட்பு என்று சொன்னாரோ .தெரியலை அரசியலில் இதெல்லாம் சகஜம் அப்பா 








Saturday, June 4, 2011

தமிழக முதல்வரை நடிகர் கமலஹாசன் இன்று சந்தித்து பேசிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் .





தமிழக முதல்வரை நடிகர் கமலஹாசன்இன்று சந்தித்து பேசிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் .அருகில் கௌதமியும் கமல் மகளும் கௌதமி மகளும் 
உணமையிலேயே இது அருமையான புகைப்படம் .



கவிதை : உன்னை மறந்து விடுவேன் உரிமையோடு - பிரபாஷ்கரன்





அன்று ..
உன்னை .
முதன் முதலில் 
பார்த்த போது 
பரவசம் ..
பச்சை சட்டையில்
நீ.

உன்னை 
எதிர்பார்த்து 
காதலுடன் .
நீ வரும் 
கோயிலுக்கு 
நானும் ..
வந்தேன் ..

எப்படி ..
பைத்தியமானேன் 
உன் மீது 
பச்சை மை 
பேனா வாங்கி 
பச்சை கலர் 
நோட்டு வாங்கி 
கிறுக்கினேன் 
என் மனதை 
அது கவிதையா
தெரிய வில்லை

இதோ ..
இன்றும் ..
பிறந்த நாள் 
கொண்டாடுகிறேன் 
உன்னை ..
முதன் முதல் 
பார்த்த ..
அந்த நாளை 
பச்சை 
புது 
சேலை அணிந்து

காலம் ..
வெகு தூரம் 
சென்று விட்டது 
நேற்று ..
உன்னை நினைத்தேன் 
உரிமையோடு 

இன்று ..
உன்னை 
நினைக்கிறன் 
உரிமை இல்லாமல்

நாளை.
உன்னை 
மறந்து விடுவேன் 
உரிமையோடு 





Friday, June 3, 2011

கவிதை : நிஜத்தில் நானும் தேடுகிறேன் -பிரபாஷ்கரன்





இதயத்தில் ..
கனவுகள் 
நிஜமாகுமா..
என்று ..
தெரியாத போதும் 
ஏனோ ..
நினைவுகள் 
சுகம்தான் 
காரணம் 
அதில் 
அவனின் நினைவுகள் 
நிஜத்தில் 
நானும் தேடுகிறேன் 
என் மன்னவனிடம் 
என்னவனை ..
கிடைக்காது 
என்று ..
தெரிந்த போதும் ....





Thursday, June 2, 2011

கவிதை:அமிர்தமும் நஞ்சுதான் -பிரபாஷ்கரன்





அளவுக்கு 
மிஞ்சினால் 
அமிர்தமும் 
நஞ்சுதான் 
அதனால்தான் 
அடிக்கடி முத்தம் 
தர மறுக்கிராயோ