நிறைய பேசுவோம்

Showing posts with label தீண்டும் போது. Show all posts
Showing posts with label தீண்டும் போது. Show all posts

Monday, June 6, 2011

கவிதை : உன் கைகள் என்னை .. தீண்டும் போது - பிரபாஷ்கரன்





உன் ..
முகம் பார்க்க
தவமிருந்தேன்

நீ. 
என் விரல் 
பற்றிய போது 
முகம் சிவந்தது 

உன் கைகள் 
என்னை ..
தீண்டிய  போது
வயிற்றில் ..
ஜில்லென்ற 
ஐஸ் கட்டி 
பரவியது

நீ ..
முத்தமிட 
வந்த போது 
என் ..
இமைகளும் 
வெட்கத்தில்  
மூடி கொண்டது 

உன் தோளில் 
முகம் ..
சாய்க்கும் 
வேளையில் 
பறந்தது  பட்டம் பூச்சிகள்
என் உடலெங்கும் 

என்ன விலை 
தந்தும் 
பெற ஏங்குகிறேன் 
உன் காதலை ..

கனவில் மட்டும் 
வரும் ..
என் காதலனே 
நினைவில் ..
என்று ..
நீ வரப் போகிறாய்