நிறைய பேசுவோம்

Showing posts with label அட்சய திருதியை. Show all posts
Showing posts with label அட்சய திருதியை. Show all posts

Thursday, May 5, 2011

நம்பிக்கையை விலை கொடுத்து வாங்க முடியவில்லை -பிரபாஷ்கரன்


அட்சய திருதியை 
கொண்டாடுகிறார்கள் 
தங்கம் வாங்கினால் 
பொருட்கள் சேருமாம்
நம்பிக்கை 
ஏழைகள் ..
எங்கே ..
வாங்குவது தங்கம்
நம்பிக்கையை 
விலை கொடுத்து 
வாங்க முடியவில்லை 
எங்களால் 
பேரில் தங்கத்தை 
வைத்து 
அழகு பார்க்கும் 
நாங்கள் 
தங்கத்தை 
எங்கே வாங்குவது 
நாளை 
திருமணத்திற்கு 
எத்தனை பவுன் 
போடுவீர்கள் 
என்பது போய் 
எத்தனை 
கிராம் தங்கம் 
போடுவீர்கள் 
என்ற கேள்வி 
வந்து விடும் 
பெண்களே ..
தங்கத்தின் மீதுள்ள 
மோகத்தை .
தவிருங்கள் 
அதனால் 
பயன் பெறப்போவது 
நீங்கள்தான் ..