நிறைய பேசுவோம்

Wednesday, September 26, 2012

இவருக்கும் தாடி இருக்கு அதானோ .

Sundarapandian Movie Photos, Stills, Images, Posters
சுந்தர பாண்டியன் படம் பார்த்தேன் . பாரதி ராஜா படம் போல் வெட்டு குத்து . எல்லோரும் டி.ஆர் யை கிண்டல் செய்வர் இங்கு சசி குமார் வெட்டு பட்டு குத்து பட்டும் எழுந்து சண்டை போட்டு ஜெயிக்கிறார் இம் இவருக்கும் தாடி இருக்கு அதானோ .. படத்தில் வசனங்கள் நன்று ஆனால் படத்தை ஒரு சமூகம் சார்ந்து எடுத்ததுதான் ஏன் என்று புரிய வில்லை ..?

Tuesday, September 18, 2012

நீ தான் தெருமுனையில்



விநாயகர் சதுர்த்தி ..
--------------------------
பிள்ளையார் ..
நீ ..
நட்பு கடவுள் ..
போகிற போக்கில் 
ஒரு கும்பிடுவை
போட்டுவிட்டு
வேண்டுதலையும்
போட்டு விடுவோம்
எளிமை கடவுள்
என்றால் ...
நீ தான்
தெருமுனையில்
கூட்டம் இல்லாமல்
ஆரவாரம் இல்லாமல்
காட்சி தரும்
உன்னை ..
வாழ்த்தி வணங்குகிறேன்

Sunday, September 9, 2012

காதல் . மரித்து விடும் ...


பணம் ..
இனித்த போது 
உனக்கு ..
காதல் கசந்தது ..
நாளை ..
பணம் புளிக்கும் 
போது .
காதல் .
மரித்து விடும் ...

அடிக்கடி மின்னலாய்


வெளியே மழை ..
மனமெங்கும் 
நினைவு மழை 
நினைவு சாரலில் 
விட்டு விட்டு 
விழும் தூறலாய் 
உன்..
முகம் ..
அடிக்கடி மின்னலாய் 
மறைவது ஏனோ ..

கடலில் .. முழ்கினால் கூட


கடலில் ..
முழ்கினால் கூட 
கரை சேர்ந்து 
விடலாம் ..
அவள் ..
நினைவுகளில் 
முழ்கினால்..
................

திருமணம் ஆகும் முன் ..


நீ ..
இல்லாத வாழ்க்கை 
எனக்கு இல்லை 
சொன்னது அவள் 
அவளுக்கு ..
திருமணம் 
ஆகும் முன் ..

Thursday, September 6, 2012

கந்தக பூமியை கண்ணீர் பூமி


கந்தக பூமியை 
கண்ணீர் பூமி 
ஆக்கியது..
யார்.. 
அதிகாரிகளா 
முதலாளிகளா 
யாராயிருந்தாலும் 
தண்டிக்க ..
படவேண்டியவர்கள .
நாம் ..
மாறுவோமே
வேண்டாம் இந்த
பட்டாசும் மத்தாப்பும்
இப்போது ..
அதில் தெரிவது
ரத்தமும் சதயும்தான் ..