சிறுகதை : நல்லா படிக்கணும் - பிரபாஷ்கரன்
"என்னங்க நம்ம பிள்ளை நல்லா படிக்கணும் எல்.கே .ஜி தானேனுன்னு விட்டுட கூடாது " கண்டிப்புடன் கூறினால் திவ்யா
"இப்ப என்னை என்ன பண்ண சொல்றே சொல்லு " கேட்டான் ரவி
"இல்லிங்க இப்பவே டியூஷன் சேர்த்திடனும் " சொன்னால் திவ்யா
"அதெல்லாம் அடுத்த மாதம் பாப்போம் " என்று ரவி சொன்ன போது
"என்னங்க அடுத்த மாதமா இப்பவே சேர்தாதான் நல்லா இங்கிலீஷ் கத்துக்க முடியும் நான் அப்பத்தான் அவளுக்கு என்னால் நல்லா இங்கிலீஷ் இல் சொல் லித்தரமுடியும் அதனால் என்னை இன்றே இங்கிலீஷ் டியூஷன் இல் சேர்த்து விடுங்கள்" என்று அடம் பிடித்த மனைவியை ஆச்சர்யமுடன் பார்த்தான் ரவி
