நிறைய பேசுவோம்

Showing posts with label கல்லூரிகள். Show all posts
Showing posts with label கல்லூரிகள். Show all posts

Saturday, May 7, 2011

கல்லூரி கனவுகள் நாளை நிஜமாகும்

+2   ரிசல்ட் 

கல்லூரி கனவுகள் 
நாளை நிஜமாகும் 
நாள் ..
வெற்றி உன் 
வாசலை தட்டும்

எதிர்கால தூண்கள் 
நீங்கள் ..
என்ன மேலே 
படிக்க போகிறோம் 
என்ற ஆயிரம் 
கேள்விகள் 

எங்கே படிக்க 
போகிறோம் 
எப்படி படிக்கப் 
போகிறோம் 
என்பதை 
தீர்மானம் 
செய்யுங்கள் 
உங்களுக்கு 
பிடித்ததை படியுங்கள் 
அதையும் 
சிறந்த கல்லூரியில் 
படியுங்கள் 
எல்லோரும் 
வெற்றி பெறுங்கள் 
உங்களின் வெற்றி 
உங்கள் பெற்றோருக்கு 
பேரானந்தம்
வாழ்த்துக்கள் 


Friday, May 6, 2011

எல்லா படிப்புக்கும் மரியாதையும் மதிப்பு உண்டு


தொடர்ந்து தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் துவங்கப்பட்டு வருகிறதே இது என்ன சீக்கிரம் பணம் சம்பாதிக்கும் வியாபாரமா தெரியவில்லை படிக்கும் அனைவருக்கும் வேலை கிடைத்து விடுகிறதா .இல்லை அனைத்து கல் லூரிகளும் சிறப்பான கல்வியை தருகிறதா . எத்தனை கல்லூரிகளில் தகுதியான ஆசிரியர்கள் உள்ளனர் முதலில் தகுதியான சம்பளம் கொடுத்தால்தானே ஆசிரியர்களை பற்றி பேச முடியும் . பொறியியல் படிப்பு மோகத்தில் உங்கள் பணத்தை கொட்டி கல்லூரியில் சேர்த்து பின் வருந்தாதீர்கள் பிள்ளைகளின் விருப்பத்தையும் தெரிந்து கொள்ளுங்கள் எல்லா படிப்புக்கும் மரியாதையும்   மதிப்பு உண்டு ஆனால் எப்படி நாம் படிக்கிறோம் என்பதை பொருத்து இருக்கிறது . இந்த அரசாங்கமும் தனியார் பொறியியல் கல்லூரி பள்ளிகளை பற்றி கண்டு கொள்வதேயில்லை எல்லா அம்சங்களும் இருக்கவேண்டும் என்று சொல்வார்கள் ஆனால் முக்கியமான ஆசிரியர்களின் சம்பளம் பற்றி அவர்கள் கவலை படுவதே இல்லை அரசாங்கத்தில் தோட்ட வேலை பார்ப்பவர் கூட தனியார் கல்லூரி பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களை விட கூட சம்பளம் வாங்குவார் இது என்ன நியாயமோ தெரியவில்லை இதற்கெலாம் எந்த கமிசனும் போடமாட்டார்களா .. இம் என்ன செய்வது எல்லாம் அவன் செயல் என்று போக வேண்டியதுதான்