இன்று ப்ளாக் எழுத நினைத்த போது சோக செய்திகள் இன்று கேட்கும்படி ஆனதால் என் மனம் மிகவும் சோர்வு அடைந்தது . வீட்டிற்கு அருகில் திருமணம் ஆகிய ஒன்றரை மாதத்தில் மாப்ளை பயன் மூளை காய்ச்சலால் சென்னையில் மரணம் அடைந்து மாலை கொண்டு வந்தனர் உயிரற்ற உடலை இன்ஜினியரிங் படித்து சென்னையில் வேலை பார்த்தவன் இப்படி திடீர் மரணம் இதை கேட்டபோது எனக்கு ஏனோ கடவுள் மேல் கோபம் வந்தது விதி படிதான் எல்லாம் நடக்கும் என்றால் ஏன் நாம் முயற்சி செய்யவேண்டும் எதற்கும் வாழ்கையில் என்ன நடந்தாலும் சரி என்று நாம் போகலாமே இதெல்லாம் என்ன கொடுமை சில விசயங்களை யோசிக்கும் போது விடை கிடைப்பதில்லை எதை நோக்கி போகிறோம் நமக்கு இந்த வாழ்கையில் என்ன கிடைக்கிறது ஒன்றும் புரியவில்லை .ஏதோ நான் உளறியது போல் கூட தோன்றலாம். ஆனால் திருமணம் ஆகி ஒன்றரை மாதத்தில் இறந்த அந்த பையனின் மரணம் என்னை பாதித்தது ஏதோ இங்கு அதை எழுதிய போது ஒரு சின்ன ரீலீப் கிடைத்ததாக உணர்கிறேன்