இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
கண்கள்
-பிரபாஷ்கரன்
“ரம்யாவின் கண்களை நேருக்கு நேர் சந்திக்க தைரியம் இல்லாமல் தலையை குனிந்து கொண்டான் சேகர் “
“என்ன சேகர் இப்ப என்னை எதற்கு பார்க்க வந்தாய் .அதுவும் இத்தனை வருடம் கழித்து ..” கேட்டாள் ரம்யா
“என் அம்மா பேச்சை கேட்டு உனக்கு துரோகம் செய்துட்டேன் எனக்கு நிம்மதி இல்லை என்னை ஏற்றுக் கொள்வியா “ விம்மலுடன் கேட்டான் சேகர்
ரம்யாவின் முகத்தில் கோபம் தெரிந்தது
“சேகர் உன் மனைவி குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்” அவள் கேட்டவுடன் தலையை குனிந்து கொண்டான் சேகர்
“நீ என்னை ஏமாற்றியதற்கு உன் குடும்பம் என்ன செய்தது .. அவர்கள் ஆசை கனவுகளை நிறைவேற்று உன் குடும்பதத மகிழ்ச்சியா வைத்திரு.. ஒரு கோழையை காதலித்தது ஏன் தவறு இனி இது மாதிரி நினைப்போடு என்னை பார்க்க வராதே “
சொல்லியவள் திரும்பி பார்க்காமல் நடந்தாள்.. ஏனோ அவள் விழிகளில் வழிந்த கண்ணீர் ...காதலை சொல்லியது அது அவளுக்கு மட்டுமே தெரியும் ..”
-பிரபாஷ்கரன்
No comments:
Post a Comment