நிறைய பேசுவோம்

Sunday, November 27, 2011

அந்த ... மழை காலங்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஜன்னலின் வெளியே
மிதமான மழை...
குளிர்ந்த காற்று
பருகிட சூடான ..
டீ..
சாப்பிட ..
இதமான காரம்
இதமான குளிரிலும்
நீயும் நானும்
சேர்ந்து ..
ஒரு குடையில்
நனைந்த ..
அந்த ...
மழை காலங்கள்
என் மனதில்
மின்னலாய் ..
மின்னி மின்னி
மறைந்து ..
போகிறது ..
ஏனோ ..
நீ ..
என்றும் மின்னி
மறையும் ..
மின்னல்தான் ..
இதோ ..
மழை ..வெளியே
விட்டு .. விட்டது ..
மனதினில் ..
மின்னி கொண்டு ..
இருக்கும் .. தூறல்
மட்டும் ..
விடுவதாயில்லை ..


2 comments:

ரிஷபன் said...

மனதினில் ..
மின்னி கொண்டு ..
இருக்கும் .. தூறல்
மட்டும் ..
விடுவதாயில்லை ..

ஆமாம்.. சாரலில் நானும் நனைந்தேன்

பாலா said...

//சேர்ந்து ஒரே குடையில் நனைந்த...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.