இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
நேற்று மனைவிக்கு மூக்குத்தி வாங்கலாம் என்று நகை கடைக்கு சென்றேன் .மூக்குத்தியின் விலை 450 ரூபாய் செய்கூலி இதில் அடக்கம் 100 ரூபாய் பழைய மூக்குத்தி ஒன்றல்ல இரண்டு போட்டேன் அதற்கு அவர்கள் சொன்ன விலை 125 ரூபாய் .என்ன நியாயமோ தெரியவில்லை எப்போது நகை கடைக்கு சென்றாலும் எனக்கு பிரச்சினைதான் அவர்கள் சொல்லும் செய்கூலி சேதாரம் எல்லாமே 15 சதம் கூடுதல் விலை தான் வருகிறது .பொதுவாக நாம் எந்த பொருள் வாங்கினாலும் ஒரு விலை இருக்கும் .ஆனால் இந்த நகையில் மட்டும் KDM க்கு அன்றைய விலையை விட 10 சதம் கூட இருக்கும் ஆனால் விற்கும் போது அன்றைய நகை விலைக்கு எடுப்பார் அன்றைய விலையை விட 10 சதம் கூட எடுத்து கொள்ள மாட்டார் .
செய்கூலி சேதாரம் எல்லாம் வாங்கும் போது தான் விற்கும் போது கூட்டி களைத்து பார்த்தால் சுமார் 15 முதல் 20 சதம் நமக்கு நஷ்டம் தான் .
ஆகவே e -gold முறையில் தங்கத்தை வாங்கி சேமியுங்கள் சேதாரம் இல்லை செய்கூலி இல்லை வேண்டும் போது விற்று கொள்ளலாம் . இது நான் பட்ட பிறகு எனக்கு ஏற்பட்ட எண்ணம் .இதை உங்களோடு பகிர்ந்து கொண்டேன் ..
1 comment:
ஆகவே e -gold முறையில் தங்கத்தை வாங்கி சேமியுங்கள் சேதாரம் இல்லை செய்கூலி இல்லை வேண்டும் போது விற்று கொள்ளலாம் . இது நான் பட்ட பிறகு எனக்கு ஏற்பட்ட எண்ணம் .இதை உங்களோடு பகிர்ந்து கொண்டேன் ..
பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>
Post a Comment