Pages

Monday, February 13, 2012

அந்த விஷத்தை விட்டு விடுங்கள்

காதலர் தினம் .. இன்று ஒரு சோகத்தை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .feb 10 எனது பிறந்த நாள் அன்று எனக்கு ஒரு சோகமான செய்தி கேட்டது என் நண்பரின் மரணம்தான் அது . என் பிறந்த நாள் கொண்டாட்டத்தை மறந்து விட்டு அவரின் இறுதி நிகழ்ச்சிக்கு சென்று விட்டேன் . அவரின் மரணம் காதலால்தான்  நடந்தது . காரணம் ஒரு பெண்ணை விரும்பியுள்ளார் அவள் சுற்றி வளைத்து பார்க்கும் போது தங்கை முறை வந்துள்ளது அதனால் யாரும் சம்மதம் தரவில்லை இது நடந்தது சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் .அன்று முதல் குடிக்க ஆரம்பித்து தன் வாழ்கையை தொலைத்து இறுதியில் மரணத்தை தேடிகொண்டார் இதுதான் சுருக்கமாக நடந்தது .இது என் மனதை பாதித்தது காதல் ஏன் வருகிறது எப்படி வருகிறது தெரியவில்லை இருவரும் காதலிக்கிறார் ஆனால் இதில் ஒருவர் சுயநலமாக மாற ஒருவர் வாழ்க்கை பாதிக்கிறது இல்லை சமுதாயத்தால் இருவரும் பாதிக்க படுகின்றனர் . சோதனையை சாதனை ஆக மாற்ற முடிந்தவர்கள் காதலியுங்கள் இல்லை அந்த விஷத்தை விட்டு விடுங்கள் 

1 comment:

  1. உண்மைதான் நண்பரே. காதல் வாழ்க்கை புத்தகத்தின் ஒரு பக்கம்தான். அது சரியாக இல்லாத காரணத்தால், அடுத்தடுத்து வரும் நல்ல பக்கங்களை பார்க்காமேலேயே புத்தகத்தை தூக்கி எறிவது முட்டாள்தனம்.

    ReplyDelete