நிறைய பேசுவோம்

Saturday, June 23, 2012

சங்கீதம் ..


நானும் ..
சங்கீதம் ..
தெரிந்து கொண்டேன் ..
உன்..
பெயரை
உச்ச்சரித்துதான்

உன் முத்தத்திற்கு


சாப்பிடும் ..முன் 
சாப்பாட்டிற்கு பின் 
சர்க்கரை அளவு 
நான் ..
பார்ப்பதில்லை 
அன்பே ..
உன் முத்தத்திற்கு 
முன் ..
உன் முத்தத்திற்கு 
பின்தான் பார்க்கிறேன் 

Thursday, June 21, 2012

மனதளவில் காதலோனோடு ..


Saguni Heroine Pranitha Pictures 05
காதலிக்க அவன்
கல்யாணம் ..
செய்து கொள்ள
 இவன் ...
நானும் ..
பத்தினிதான் ..
ஆம் ..
வாழ்வது கணவனோடு
ஆனால்
வாழ்ந்தது ..
மனதளவில்
காதலோனோடு ..

Sunday, June 17, 2012

என்னுடைய ஹீரோ

தந்தையர் தினம் 
----------------------
அன்றும் ..இன்றும் 
என்றும் 
என்னுடைய ஹீரோ 
என் தந்தையே 

Sunday, June 10, 2012

மனம் கொத்தி பறவை ஏனோ மனதை கொத்தவில்லை


மனம்  கொத்தி பறவை பார்த்தேன் ஏனோ மனதை கொத்தவில்லை .சிவா கொஞ்சம் நடிக்க கற்றுக்கொள்ள வேண்டும் .முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்ட தெரியவில்லை .1980 களில் வந்திருக்க வேண்டிய படம் .காமெடி என்ற பெயரில் பல இடங்களில் கொத்தி எடுக்கிறார்கள் .பாவம் சிவா ஏனோ நல்ல படங்கள் அவருக்கு அமைய மாட்டேங்குது .அவரும் கொஞ்சம் நடிப்பில் முனேற்றம் காட்ட வேண்டும் .இல்லை என்றால் அவருக்கு டிவி தான் லாயக்கு என முத்திரை குத்தி விடுவார்கள் 

Sunday, June 3, 2012

அண்ணன் தங்கைக்கு செய்வதெல்லாம் நான் சினிமாவில்தான் பார்த்து கேட்டுள்ளேன்

இன்று நான் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன் அதில் விசேசம் என்னவெனில் அண்ணன் தன் தங்கைக்கு செய்து வைத்த திருமணம் சுமார் பதினைந்து லட்சம் செலவு செய்து ,தங்கை கல்லூரி பேராசிரியை மாப்ளை அரசு பள்ளி ஆசிரியர் . தங்கையை இவளவு தூரம் படிக்கவும் வைத்துள்ளார் ஆனால் அண்ணன் படித்தோ ஐந்தாம் வகுப்பு ஆட்டோ ஒட்டி அதில் வந்த வருமானத்தில் இவ்வளவு செய்துள்ளார் .எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர் ஒரு ஆட்டோ வாடகைக்கு வேறு விட்டுள்ளார் .அண்ணன் தங்கைக்கு செய்வதெல்லாம் நான் சினிமாவில்தான் பார்த்து கேட்டுள்ளேன் .உண்மையில் இவர்தான் பாட்சா .. அவரை மனமார வாழ்த்துவதில் பெருமிதம் அடைகிறேன்

Thursday, May 31, 2012

பிரிங் யுவர் வாட்ச் இன் லெப்ட் ஹான்ட்


 

நான் +2 படிக்கும்போது கெமிஸ்ட்ரி ஆசிரியர் ஒரு equation யை போர்டில் எழுத சொன்னார் .நானும் எழுதினேன் .திடிரென்று கத்தினார். பிரிங் யுவர் வாட்ச் இன் லெப்ட் ஹான்ட். எல்லாவற்றிலும் உயர்துவிடோம் என்ற நினைப்பு என்று சொல்லியபடியே, .. நானும் அமைதியாக வாட்ச் யை கழற்றி ரைட் ஹான்ட் இல் இருந்து லெப்ட் க்கு மாற்றினேன் . ஆனால் உள்ளுக்குள் அந்த ஆசிரியரை போடா புண்ணாக்கு என்று திட்டினேன் மனதில் ஆனால் அதன்பிறகு இன்று வரை வாட்ச் ரைட் ஹான்ட் இல்தான் கட்டி வருகிறேன் .ரைட் ஹான்டில் கட்டினால் என்ன தவறு அதன் பிறகு யாரும் என்னை எதுவும் சொன்னதில்லை சில சமயம் என் கையை சிலர் ஒரு மாதிரி பார்ப்பது உண்டு எனக்கு அந்த 
கெமிஸ்ட்ரி ஆசிரியர் மீது இன்றும் கூட கோபம் உண்டு இவர் யார் சொல்வது நான் ரைட் ஹான்டில் தான் கட்டுவேன் என்று காட்டினேன் ..இதில் ஏதும் தவறு உள்ளதா..