நிறைய பேசுவோம்

Sunday, June 10, 2012

மனம் கொத்தி பறவை ஏனோ மனதை கொத்தவில்லை


மனம்  கொத்தி பறவை பார்த்தேன் ஏனோ மனதை கொத்தவில்லை .சிவா கொஞ்சம் நடிக்க கற்றுக்கொள்ள வேண்டும் .முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்ட தெரியவில்லை .1980 களில் வந்திருக்க வேண்டிய படம் .காமெடி என்ற பெயரில் பல இடங்களில் கொத்தி எடுக்கிறார்கள் .பாவம் சிவா ஏனோ நல்ல படங்கள் அவருக்கு அமைய மாட்டேங்குது .அவரும் கொஞ்சம் நடிப்பில் முனேற்றம் காட்ட வேண்டும் .இல்லை என்றால் அவருக்கு டிவி தான் லாயக்கு என முத்திரை குத்தி விடுவார்கள் 

Sunday, June 3, 2012

அண்ணன் தங்கைக்கு செய்வதெல்லாம் நான் சினிமாவில்தான் பார்த்து கேட்டுள்ளேன்

இன்று நான் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன் அதில் விசேசம் என்னவெனில் அண்ணன் தன் தங்கைக்கு செய்து வைத்த திருமணம் சுமார் பதினைந்து லட்சம் செலவு செய்து ,தங்கை கல்லூரி பேராசிரியை மாப்ளை அரசு பள்ளி ஆசிரியர் . தங்கையை இவளவு தூரம் படிக்கவும் வைத்துள்ளார் ஆனால் அண்ணன் படித்தோ ஐந்தாம் வகுப்பு ஆட்டோ ஒட்டி அதில் வந்த வருமானத்தில் இவ்வளவு செய்துள்ளார் .எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர் ஒரு ஆட்டோ வாடகைக்கு வேறு விட்டுள்ளார் .அண்ணன் தங்கைக்கு செய்வதெல்லாம் நான் சினிமாவில்தான் பார்த்து கேட்டுள்ளேன் .உண்மையில் இவர்தான் பாட்சா .. அவரை மனமார வாழ்த்துவதில் பெருமிதம் அடைகிறேன்

Thursday, May 31, 2012

பிரிங் யுவர் வாட்ச் இன் லெப்ட் ஹான்ட்


 

நான் +2 படிக்கும்போது கெமிஸ்ட்ரி ஆசிரியர் ஒரு equation யை போர்டில் எழுத சொன்னார் .நானும் எழுதினேன் .திடிரென்று கத்தினார். பிரிங் யுவர் வாட்ச் இன் லெப்ட் ஹான்ட். எல்லாவற்றிலும் உயர்துவிடோம் என்ற நினைப்பு என்று சொல்லியபடியே, .. நானும் அமைதியாக வாட்ச் யை கழற்றி ரைட் ஹான்ட் இல் இருந்து லெப்ட் க்கு மாற்றினேன் . ஆனால் உள்ளுக்குள் அந்த ஆசிரியரை போடா புண்ணாக்கு என்று திட்டினேன் மனதில் ஆனால் அதன்பிறகு இன்று வரை வாட்ச் ரைட் ஹான்ட் இல்தான் கட்டி வருகிறேன் .ரைட் ஹான்டில் கட்டினால் என்ன தவறு அதன் பிறகு யாரும் என்னை எதுவும் சொன்னதில்லை சில சமயம் என் கையை சிலர் ஒரு மாதிரி பார்ப்பது உண்டு எனக்கு அந்த 
கெமிஸ்ட்ரி ஆசிரியர் மீது இன்றும் கூட கோபம் உண்டு இவர் யார் சொல்வது நான் ரைட் ஹான்டில் தான் கட்டுவேன் என்று காட்டினேன் ..இதில் ஏதும் தவறு உள்ளதா..

Monday, May 28, 2012

பவர் ஸ்டார்..............பவர் ஸ்டார்



பவர் ஸ்டார் கலந்து கொண்ட நீயா நானவை யூ டுயுபு இல் பார்த்தேன் .கோபிநாத்தின் கேள்வியை லாவகமாக கையாண்டு பதில் சொல்லியிருகிறார். அவரை நடிகன் என்பதால்தான் நிகழ்ச்சிக்கு கூபிட்டு இருக்கிறார் பின் உங்கள் இனொரு முகத்தை கொண்டு வர முயற்சி செய்கிறேன் நீங்கள் டாக்டர் என்று விடாபிடியாக கோபிநாத் கேட்பதில் நியாயம் இல்லை .உங்களுக்கு சதித்திட்டம் தீட்டுவது யார் என்று கேட்க முதலாவது ஆள் நீங்கள்தான் என்று கோபிநாத்தை சொன்னது நெத்தியடி .சிறப்பு விருந்தினர் என்று ஒருவரை கூப்பிட்டு இப்படி கேள்வி கேட்டு அவரை அவமானபடுத்துவது அழகல்ல .இந்த மாதிரி கோபிநாத் நிகழ்சிகளை நடத்தினால் விஜய் டி.விதான் பாவம் ..வர வர அவர் கேட்கும் கேள்விகளில் தான் என்ற ஆணவம் தெரிகிறது ..

Saturday, May 26, 2012

திருச்சியில் மலைகோட்டை அருகில் மைக்கேல் ஐஸ் க்ரீம்



திருச்சியில் மலைகோட்டை அருகில் மைக்கேல் ஐஸ் க்ரீம் பார்லர் இருக்கும் அங்கு அப்போது ஐஸ் க்ரீம் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் மட்டுமே .அதை நண்பர்களுடன் வாங்கி சாப்பிடுவதில் பேரானந்தம் தீர தீர வாங்கி கொண்டே இருப்போம் ரோடை பார்த்து உட்கார இடம் பிடிக்க பெரிய அடிதடியே நடக்கும் எங்களுக்குள் அப்பதான் சைட் அடிக்க முடியும் ரோட்டை பார்த்து என்று .. இம் அது ஒரு கனா காலம் இப்போ அங்கு எவ்வளவு ஐஸ் க்ரீம் இந்த அனுபவம் எதனை பேருக்கு உண்டு ..

Thursday, May 24, 2012

சேவற்கொடி.....சண்டைகோழி



சேவற்கொடி படம் பார்த்தேன் .பரவாயில்லை ரகம் தான் .ஹீரோ விளங்கவில்லை .சண்டைகோழி போன்று பரபரப்பாக கொண்டு செல்ல வேண்டிய படம் டைரக்டர் கோட்டை விட்டுவிட்டார் .அருமையாக கொண்டு சென்று இருக்க வேண்டிய படம் என்ன சொல்வது இயக்குனர் என்பவர் படத்திற்கு ரொம்ப முக்கியமானவர் என்பது இந்த படத்தை பார்த்தால் தெரியும் .. நன்கு எடுத்திருக்க  படவேண்டிய படம் .. 

தூசியிலும் குப்பையிலும்



மூலையில்..
தூசியிலும் குப்பையிலும்
இருந்த ..
சைக்கிள் சிநேகமாய் 
சிரித்தது..வாரி 
அணைத்து 
கொண்டேன்