இந்துக்களை கிண்டலடித்து இந்து கடவுள்களை கிண்டலடித்து பணமும் சம்பாதித்து கொள்வதும் இந்துக்களே. மற்ற மதத்தினரை பாராட்டத்தான் வேண்டும் அவர்களையோ அவர்களின் கடவுள்களையோ எதுவும் சொல்வதில்லை அவர்கள் ,இந்த விசயத்தில் அவர்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.
நிறைய பேசுவோம்
Tuesday, September 24, 2024
Monday, September 23, 2024
தவறு
தன்னால் மட்டுமே. எல்லாம். முடியும். என்று நினைப்பதும் தவறு தன்னால்தான் எல்லாம் நடந்தது என்றும் நினைப்பதும் தவறு
Sunday, September 22, 2024
எல்லாமே சரி
கொஞ்சம் பிரபலமானா அவங்க எழுதுவது பேசுவது எல்லாமே சரின்னு நம்பும் ஒரு கூட்டம் இருக்கும் வரை நாம் ஒன்றும் செய்ய முடியாது..
Saturday, September 21, 2024
டேய் உன் ஆளு
Wednesday, September 18, 2024
இல்லத்தரசி
சென்ற வார நீயா நானாவில் இல்லத்தரசியாக இருப்பதே என் விருப்பம் என்று சொன்ன பெண் மீது பலர் காட்டமா இருப்பது போல் தெரிகிறது அது அவரின் விருப்பம் அப்படி அமைவதும் வரம் அதை வேண்டி பலரும் இருக்கலாம். உண்மையா மனதில் பட்டதை பேசிய அவருக்கு வாழ்த்துகள்.
Tuesday, September 17, 2024
வித்தியாசமானவைதான்
நேற்று பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அலங்காநல்லூர் வரை பேருந்து பயணம் மகளிருக்கு இலவச பேருந்து அதனால் பேருந்தில் சொற்ப ஆண்களே.. எனக்கு அருகில் ஒரு வயதான பெண்மணி அமர்ந்து கொண்டார் பெண்கள் கூட்டம் ஒவ்வொரு நிறுத்தத்திலும் அதிகம் பேர் எற ஒரு பெண்மணி இன்னெருவரை இடித்து விட என்ன எருமை மாடு மாதிரி இடிக்கிறே அவர் சொல்ல இவர் ஏன் உன் வீட்ல ஆன்பள எருமை மாடு மாதிரி உன் மேல விழுவானே அப்பல்லாம் இனிக்குமா.. பதிலுக்கு அந்த பெண் ஏதோ சொல்ல ஆரம்பிக்க எல்லா பெண்களும் வேடிக்கைதான் பார்த்தனர் ..ஏன் தனி பஸ்ல வரது இடிபடமா சேர் ஆட்டோவில் காசு கொடுத்து போறது இப்படியே பேச்சு நீள மொபைல் ஹெட்போனை காதில் சொருகிக் கொண்டேன் ஆன்லன் எப்ம்மில் இளையராஜா பாட்டு அலங்காநல்லூர் சேரும் வரை.
