நிறைய பேசுவோம்

Sunday, September 22, 2024

எல்லாமே சரி

 கொஞ்சம் பிரபலமானா அவங்க எழுதுவது பேசுவது எல்லாமே சரின்னு நம்பும் ஒரு கூட்டம் இருக்கும் வரை நாம் ஒன்றும் செய்ய முடியாது..

Saturday, September 21, 2024

டேய் உன் ஆளு

நேற்றும் ஒரு சிறிய பஸ் பயணம் முழுவதும் தேர்வு முடித்த மெட்ரிகுலேசன் மாணவர்கள் 7 அல்லது 8 படிக்கலாம்.
டேய் உன் ஆளு என் ஹால்லதான் எக்ஸாம் எழுதுச்சு ..உன் ஆளு என் ஆளு இப்படித்தான் பேச்சு இருந்தது. சிரித்து கொண்டே நகர்ந்து விட்டேன்All reaction

Wednesday, September 18, 2024

இல்லத்தரசி

 சென்ற வார நீயா நானாவில் இல்லத்தரசியாக இருப்பதே என் விருப்பம் என்று சொன்ன பெண் மீது பலர் காட்டமா இருப்பது போல் தெரிகிறது அது அவரின் விருப்பம் அப்படி அமைவதும் வரம் அதை வேண்டி பலரும் இருக்கலாம். உண்மையா மனதில் பட்டதை பேசிய அவருக்கு வாழ்த்துகள்.

All reactio

Tuesday, September 17, 2024

வித்தியாசமானவைதான்

 நேற்று பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அலங்காநல்லூர் வரை பேருந்து பயணம் மகளிருக்கு இலவச பேருந்து அதனால் பேருந்தில் சொற்ப ஆண்களே.. எனக்கு அருகில் ஒரு வயதான பெண்மணி அமர்ந்து கொண்டார் பெண்கள் கூட்டம் ஒவ்வொரு நிறுத்தத்திலும் அதிகம் பேர் எற ஒரு பெண்மணி இன்னெருவரை இடித்து விட என்ன எருமை மாடு மாதிரி இடிக்கிறே அவர் சொல்ல இவர் ஏன் உன் வீட்ல ஆன்பள எருமை மாடு மாதிரி உன் மேல விழுவானே அப்பல்லாம் இனிக்குமா.. பதிலுக்கு அந்த பெண் ஏதோ சொல்ல ஆரம்பிக்க எல்லா பெண்களும் வேடிக்கைதான் பார்த்தனர் ..ஏன் தனி பஸ்ல வரது இடிபடமா சேர் ஆட்டோவில் காசு கொடுத்து போறது இப்படியே பேச்சு நீள மொபைல் ஹெட்போனை காதில் சொருகிக் கொண்டேன் ஆன்லன் எப்ம்மில் இளையராஜா பாட்டு அலங்காநல்லூர் சேரும் வரை.

C

Monday, September 16, 2024

பெண்கள்

 பொய்களை விரும்பி ரசிக்கும்



பெண்கள் ஏனோ உண்மையை ரசிப்பதில்லை

Thursday, September 12, 2024

தகுதியில்லாத நபரை


தகுதியில்லாத நபரை தகுதியுள்ள இடத்தில் அமர்த்தினால் நாம் தகுதியிழகக கூடும்

Wednesday, September 11, 2024

உசாராயிருங்கள்

 மதுரையில் உள்ள பிரபல துணிக்கடையில் ஆடித தள்ளுபடியில் துணி வாங்கிய போது கூப்பன் வழங்கி.னர் .அதாவது அடுத்த மாதம் வாங்கும் போது செல்லும் 1500 க்கு 250 என்று பல கூப்பன்கள் ஆனால் வேடிக்கை என்னவென்றால் இப்போது வாங்க சென்றால் எல்லா துணி ராகங்களுக்கும்செல்லாது குறிப்பிட்ட ரகங்களுக்கு மட்டும். என்ன ஏமாற்று வேலை உசாராயிருங்கள்