மகாவிஷ்னு பேசியதில் பெரிய அபத்தம் போன ஜென்மம் அடுத்த ஜென்மம் என்று பேசியது போன ஜென்மத்தின் பாவம் இந்த ஜென்மத்தில் குறையோட பிறந்துள்ளார்கள் என்று சொன்னால் அந்த பிள்ளைகளை பெற்ற பெற்றொர்கள் எவ்வளவு வருத்தப்படுவர் மற்றவரின் பார்வை அவர்கள் மேல் எப்படி இருக்கும். அசால்டா ஒரு தவறான கருத்தை பரப்பியிருக்கிறார். இப்ப செய்யும் பாவத்திற்கு அடுத்த ஜென்மத்தில் தண்டனைன்னா கேட்பானா எவனாச்சும் அதற்கெல்லாம் சான்று இருக்கா அவர் பேசிய உரையின் தலைப்பு என்ன தெரியல தன்னம்பிக்கை பேச்சா ஆன்மீக பேச்சா.. எதுவாயினும் தவறான கருத்து நீ பாவம் செய்தால் நீ இப்போது வாழும் போதே தண்டனை கிடைக்கும் என்றால் பயப்படுவான் அதோடு நிறுத்தியிருந்தால் வேறு மாதிரி விமர்சனங்கள் வந்திருக்கும்.ஒரு பேச்சாளரை பேச அழைக்கும் போது அவர் எதைப்பற்றி பேசுவார் அல்லது எதைப் பேச வேண்டும் என்று அமைப்பாளர்களுக்கு தெரியாதா.கடைசியில் இதுவும் அவருக்கு விளம்பரமாகித்தான் போயிருக்கு என்று நினைக்கிறேன். நிகழ்ச்சி நடக்கும்ப்போதோ அல்லது சில மணி நேரங்களில் வைரல் ஆனது எப்படி வைரல் ஆனதா ஆக்கப்பட்டதா.. என்னமோ போடா மாதவா ஒன்னுமே புரிய மாட்டேங்குது.
நிறைய பேசுவோம்
Tuesday, September 10, 2024
Friday, March 27, 2020
நிறுவனங்கள் கவனத்திற்கு
Employer+ employee share 24 per pf அரசே கட்டும் மூன்று மாதங்களுக்கு 100 employees இருக்கனும் 90 per employees 15000 க்கு கீழ் சம்பளம் இருக்கனுமாம். அப்ப சிறிய நிறுவனங்கள் தான் பயன்பெறும் மகிழ்ச்சி..
# முழு சம்பளத்தோட employer share ஐ அரசாங்கம் கட்டுவதால் employer share யை கூடுதலாக முதலாளிகள் employees க்கு மூன்று மாதங்கள் கொடுத்தால் அவர்களுக்கு 24 per கிடைக்கும்..
செய்யலாம்.
வைரஸ் எதிர்த்து வெல்வோம்.
அனைவரும் வீட்டில் இருக்கவும். அரசு சொல்லும் முன்னேற்பாடுகளை மதித்து நடப்போம் ..எதுவும் நிரந்தரம் இல்லை இந்த உலகில் .எல்லோருக்க்காகவும் பிரார்த்தனை செய்வோம் .இந்த வைரஸ் எதிர்த்து வெல்வோம்.
Saturday, May 5, 2018
அன்னையர் தினத்தில்
லேபிள்கள்:
அன்னையர் தினத்தில்
விவசாயி
“விவசாயிகளின் போராட்டத்திற்கு அரசியல்வாதி கலந்து கொண்ட வேளையில்
அவரின் மனைவியும் நடிகையும் ஆன அவள் அந்நிய குளிர்பாண பெருமைகளை விளக்கி விளம்பரம்
நடித்தாள்..”
லேபிள்கள்:
விவசாயி
Saturday, September 9, 2017
சிறுகதை :: பணம்
சிறுகதை :: பணம் பிரபாஷ்கரன்
சுகுமார் அந்த ஹோட்டலில் நுழைந்தவுடன் ஆகா.. ரவா
தோசை இங்கு நல்லாருக்கும் சாப்பிடலாம் என்று நினைத்தவன் சர்வரை அழைத்து ஆர்டர்
செய்தான் ..
“சார் வேறு என்ன வேண்டும் கேட்ட சர்வரிடம்
ஸ்டிராங்காக ஒரு காபி ..”-என்றான்
சர்வர் சென்றவுடன் பர்சில் துழாவி ஐந்து ரூபாய்
நாணயத்தை தனியாக எடுத்து வைத்து கொண்டான் டிப்ஸ் கொடுப்பதற்காக, சர்வர் கல்லாவில்
மாற்றி மிச்ச காசை கொண்டு வரும்போது பத்து ரூபாயை கொண்டு வந்து விட்டால் சுகுமார்
எப்போதுமே டிப்ஸ் வைப்பதுக்கு என்றே ஐந்து ரூபாய் நாணயத்தை தனியே வைத்திருப்பான்
..
சர்வர் பில்லை கொடுத்தவுடன் வழக்கம் போல் மிச்ச சில்லரை
எடுத்து கொண்டு ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்தான் அதை எடுத்த சர்வர் நேரே கல்லா
அருகில் இருந்த உண்டியலில் போடுவதை கவனித்த சுகுமார் மேனேஜரை அழைத்து அதை பற்றி
கேட்டான்
அவர் சிரித்தவாறே இங்கு சர்வர் எல்லோருக்கும்
நல்ல சம்பளம் தருகிறோம் டிப்ஸ் வாங்குவது வழக்கம் இல்லை இருந்தாலும்
வாடிக்கையாளர்கள் விரும்பினால் அவர்கள் தரும் டிப்ஸ்சை இந்த உண்டியலில் போட்டு
விடுவார்கள் .இந்த பணத்தை ஒரு முதியோர் இல்லத்துக்கு அனுப்பி விடுவோம் என்றார் ..
அதை கேட்டு ஒரு கணம் திகைத்த சுகுமார் சார் நான்
இந்த உண்டியலில் பணம் போடலாம் என்று கேட்டு பர்சிலிருந்து நூறு ரூபாய் எடுத்து
போட்டான் ..”
Wednesday, July 19, 2017
குழந்தை
“இரண்டு குழநதைக்கு
அம்மாவாக நடித்து கொண்டிருந்தாள் தனக்கு குழந்தை இல்லையே என்ற ஏக்கத்துடன் நடிகை
..”
Subscribe to:
Posts (Atom)

