நிறைய பேசுவோம்

Wednesday, February 5, 2014

காதலர் தின கவிதை - 5

காதலர் தின கவிதை - 5
----------------------
இன்றும் ...
தலை வாரும் போதெல்லாம் ..
உன் நினைவு
அன்று ..
கலைந்த என்
தலை முடியை
உன் விரல்களால்
கோதி விடுவாயே..

காதலர் தின கவிதை. - 4

காதலர் தின கவிதை. - 4
----------------------
காதல் சுகமானதுதான்..
ஏனோ ..
அவளின்/அவனின்
நினைவுகள்தான்
சுமையாகி போனது..

காதலர் தின கவிதை - 3

காதலர் தின கவிதை - 3
-----------------------------
நானும் ...
கட்டிக் கொண்டிருக்கிறேன்..
தாஜ்மகால் ..
கற்களால் அல்ல
உன் நினைவுகளால்..

காதலர் தின கவிதை - 2

காதலர் தின கவிதை - 2
-----------------------------------
அன்று நீ..
என்னை. கட்டி
அணைத்த வேளையில்
விலகிதான் சென்றது..
காற்று ..
நம்மை விட்டு
ஏனோ..
இன்றும் விலகாமல்..
காற்று ..நினைவுகளாய்..

காதலர் தின கவிதை- 1

காதலர் தின கவிதை- 1
----------------------------

என்ன ..
வாழ்த்து அட்டை..
நீ தருவாய்
என்ற எதிபார்ப்பு
இன்றும்..
நினைவுகளில்

Wednesday, January 29, 2014

முத்தத்தின் ஈரம்

அன்று . .
நீ தந்த
முத்தத்தின் ஈரம்
இன்றும்
காயவில்லை
ஏனோ..
காய்ந்து போனது
உன் மனது

தூக்கமில்லா இரவுகள்தான்

தூக்கமில்லா இரவுகளில் .
வரும் என்னவனே..
எப்போது சூடுவாய் எனக்கு மலர் மாலை ..
கனவிலேனும் தந்துவிடு..
இல்லையெனில்..
என்றுமே.. எனக்கு
தூக்கமில்லா இரவுகள்தான்