நிறைய பேசுவோம்

Sunday, September 9, 2012

கடலில் .. முழ்கினால் கூட


கடலில் ..
முழ்கினால் கூட 
கரை சேர்ந்து 
விடலாம் ..
அவள் ..
நினைவுகளில் 
முழ்கினால்..
................

திருமணம் ஆகும் முன் ..


நீ ..
இல்லாத வாழ்க்கை 
எனக்கு இல்லை 
சொன்னது அவள் 
அவளுக்கு ..
திருமணம் 
ஆகும் முன் ..

Thursday, September 6, 2012

கந்தக பூமியை கண்ணீர் பூமி


கந்தக பூமியை 
கண்ணீர் பூமி 
ஆக்கியது..
யார்.. 
அதிகாரிகளா 
முதலாளிகளா 
யாராயிருந்தாலும் 
தண்டிக்க ..
படவேண்டியவர்கள .
நாம் ..
மாறுவோமே
வேண்டாம் இந்த
பட்டாசும் மத்தாப்பும்
இப்போது ..
அதில் தெரிவது
ரத்தமும் சதயும்தான் ..

Sunday, September 2, 2012

உன் ஸ்பரிசம் ..


நினைவுகளில் ..
உன் .. வாசம் 
எப்போதும் ..
வாசத்தில் ..
இதமாக 
உன் ஸ்பரிசம் ..
தொட்டு விட 
வரும் போது 
விட்டு விலகும் 
உன் கைகள் ..
இன்றும் ..
அணைத்து ..
கொள்கின்றன.
நீ ..
தொலைவில்
இருந்த போதும்

Sunday, August 19, 2012

கற்கள் எதற்கு


நான் ..
கட்டபோகும் ..
மாளிகைக்கு 
கற்கள் எதற்கு 
என்னவளின் 
இதயம் மட்டும் 
போதும்

Friday, August 17, 2012

மின்னி மறையும்


மின்னி மறையும் 
மின்னல்களாய் 
அவள் ..
பார்வை ..
என்று ..
இதயம் 
வெடிக்க போகிறதோ ..
இடியாய் ..

Tuesday, August 14, 2012

சுதந்திர தினத்தன்று

இது நான் கல்லூரியில் படிக்கும் போது எழுதி பத்திரிகையில் வெளிவந்தது 

'எல்லோருக்கும் 
விடுதலை 
கூறியவர் 
பறக்க விட்டார்
புறாக்களை 
கிடைத்தது 
விடுதலை 
கூண்டிலிருந்து 
புறாக்களுக்கு ..'
----------

'கம்பி கூண்டிற்குள் 
சின்ன புறாக்கள் 
சுதந்திர தினத்தன்று 
பறக்க விடுவதற்கு ..'