நான் +2 படிக்கும்போது கெமிஸ்ட்ரி ஆசிரியர் ஒரு equation யை போர்டில் எழுத சொன்னார் .நானும் எழுதினேன் .திடிரென்று கத்தினார். பிரிங் யுவர் வாட்ச் இன் லெப்ட் ஹான்ட். எல்லாவற்றிலும் உயர்துவிடோம் என்ற நினைப்பு என்று சொல்லியபடியே, .. நானும் அமைதியாக வாட்ச் யை கழற்றி ரைட் ஹான்ட் இல் இருந்து லெப்ட் க்கு மாற்றினேன் . ஆனால் உள்ளுக்குள் அந்த ஆசிரியரை போடா புண்ணாக்கு என்று திட்டினேன் மனதில் ஆனால் அதன்பிறகு இன்று வரை வாட்ச் ரைட் ஹான்ட் இல்தான் கட்டி வருகிறேன் .ரைட் ஹான்டில் கட்டினால் என்ன தவறு அதன் பிறகு யாரும் என்னை எதுவும் சொன்னதில்லை சில சமயம் என் கையை சிலர் ஒரு மாதிரி பார்ப்பது உண்டு எனக்கு அந்த
கெமிஸ்ட்ரி ஆசிரியர் மீது இன்றும் கூட கோபம் உண்டு இவர் யார் சொல்வது நான் ரைட் ஹான்டில் தான் கட்டுவேன் என்று காட்டினேன் ..இதில் ஏதும் தவறு உள்ளதா..
பவர் ஸ்டார் கலந்து கொண்ட நீயா நானவை யூ டுயுபு இல் பார்த்தேன் .கோபிநாத்தின் கேள்வியை லாவகமாக கையாண்டு பதில் சொல்லியிருகிறார். அவரை நடிகன் என்பதால்தான் நிகழ்ச்சிக்கு கூபிட்டு இருக்கிறார் பின் உங்கள் இனொரு முகத்தை கொண்டு வர முயற்சி செய்கிறேன் நீங்கள் டாக்டர் என்று விடாபிடியாக கோபிநாத் கேட்பதில் நியாயம் இல்லை .உங்களுக்கு சதித்திட்டம் தீட்டுவது யார் என்று கேட்க முதலாவது ஆள் நீங்கள்தான் என்று கோபிநாத்தை சொன்னது நெத்தியடி .சிறப்பு விருந்தினர் என்று ஒருவரை கூப்பிட்டு இப்படி கேள்வி கேட்டு அவரை அவமானபடுத்துவது அழகல்ல .இந்த மாதிரி கோபிநாத் நிகழ்சிகளை நடத்தினால் விஜய் டி.விதான் பாவம் ..வர வர அவர் கேட்கும் கேள்விகளில் தான் என்ற ஆணவம் தெரிகிறது ..
திருச்சியில் மலைகோட்டை அருகில் மைக்கேல் ஐஸ் க்ரீம் பார்லர் இருக்கும் அங்கு அப்போது ஐஸ் க்ரீம் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் மட்டுமே .அதை நண்பர்களுடன் வாங்கி சாப்பிடுவதில் பேரானந்தம் தீர தீர வாங்கி கொண்டே இருப்போம் ரோடை பார்த்து உட்கார இடம் பிடிக்க பெரிய அடிதடியே நடக்கும் எங்களுக்குள் அப்பதான் சைட் அடிக்க முடியும் ரோட்டை பார்த்து என்று .. இம் அது ஒரு கனா காலம் இப்போ அங்கு எவ்வளவு ஐஸ் க்ரீம் இந்த அனுபவம் எதனை பேருக்கு உண்டு ..
சேவற்கொடி படம் பார்த்தேன் .பரவாயில்லை ரகம் தான் .ஹீரோ விளங்கவில்லை .சண்டைகோழி போன்று பரபரப்பாக கொண்டு செல்ல வேண்டிய படம் டைரக்டர் கோட்டை விட்டுவிட்டார் .அருமையாக கொண்டு சென்று இருக்க வேண்டிய படம் என்ன சொல்வது இயக்குனர் என்பவர் படத்திற்கு ரொம்ப முக்கியமானவர் என்பது இந்த படத்தை பார்த்தால் தெரியும் .. நன்கு எடுத்திருக்க படவேண்டிய படம் ..
மூலையில்..தூசியிலும் குப்பையிலும்இருந்த ..சைக்கிள் சிநேகமாய் சிரித்தது..வாரி அணைத்து கொண்டேன்
வழக்கு எண் 18/9 படம் பார்த்தேன் அருமை பாலாஜி சக்திவேல் படம் சாமுராய் படமே மிக அருமையாக இருக்கும் ஏனோ அது ஓடவில்லை .. இந்த படத்தை பார்க்கும் பெற்றோர்கள் இனி செல்போன் வாங்கி தருவதை தவிர்க்கலாம் .இன்று ஆறாவது படிக்கும் மாணவர்களிடம் செல்போன் கையில் உள்ளது அதில் நெட் போட்டு பார்கிறார்கள் .இனி இந்த படத்தை பார்த்தாவது பெறோர்கள் செல்போன் வாங்கி தருவதை தவிர்க்க வேண்டும் .இது போன்ற ஒரு மாணவன் காரை ஒரு பெண் மீது ஏற்றிய செய்தி பத்திரிகையில் படித்த நினைவு அந்த செய்தியை நன்கு படமாக வடிவமைத்துள்ளார் . நிறைய படங்கள் கொடுக்கட்டும் அவர் ..உண்மையில் பெரிய பிளஸ் ஹீரோ வாக நடிப்பவர் சின்ன வயது ரகுவரனை நினைவு படுத்துகிறார் .. நல்ல எதிர்காலம் உள்ளது வாழ்த்துக்கள்