நிறைய பேசுவோம்

Monday, March 21, 2011

கவிதை : லஞ்சம் ... பிரபாஷ்கரன்



பூசாரி ...
தட்டில் ...
சில்லறை 
போட்டவுடன் தான் 
கிடைத்தது ..
சாமியின் புஷ்பம் 



Saturday, March 19, 2011

சிறுகதை : சுயநலம் .. பிரபாஷ்கரன்


"என்னங்க ஐம்பது பவுன் நகை போடுறேன் கையில் ஒரு லட்சம் தரேன்னு சொல்றாங்க .. நீங்க என்னடான்னா இந்த சம்பந்தம் வேண்டாம்னு சொல்றீங்க .."
கணவனிடம் புலம்பினால் ஜானகி ..

"இல்ல ஜானகி .நாம் அந்த சம்பந்தத்தையே முடிச்சிடலாம் " சொன்னார் ராமன்

"என்னங்க 20 பவுன் போடறதா சொன்ன அந்த இடமா வசதி ரொம்ப கம்மிங்க சொன்னாள் " ஜானகி  

"அவங்க 20 பவுன்தான் போடறாங்க ஆனால் பொண்ணு நல்ல படிச்சிருக்கு இன்னிக்கி சாப்ட்வேர்ல் வேலை பார்க்குது நாளைக்கு லட்ச கணக்கில் சம்பாதிக்கும் இந்த 50 பவுன் எல்லாம் கல்யாணத்தோடு போயிடும் ஆனால்    வாழ்க்கை முழுவதும் சம்பாதித்து போடுவாள் அந்த பெண் .."

சொல்லிக்கொண்டே போகும் கணவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் ஜானகி 


லொள்ளு அவார்ட்ஸ் - 2010

இது என்னோட e மெயில் id க்கு வந்தது அனுப்பியவருக்கும் உருவாக்கியவருக்கும் நன்றி நீங்களும் ரசியுங்கள்

லொள்ளு அவார்ட்ஸ் - 2010
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 












  

கவிதை : ஆண்கள் -- பிரபாஷ்கரன்

இந்த கவிதையை எழுதி விட்டு என் நண்பர்களிடம் காண்பித்தேன்  பலரும் மெளனமாக புன்னகை புரிந்தனர். சிலர் உண்மை என்றனர் நீங்க எப்படி தெரியவில்லை விதிவிலக்கு எப்போதும் உண்டு அவர்கள் மன்னிக்கவும் . உங்கள் கருத்தையும் பதிவு செய்யுங்கள் 

கனவில் 
காதலியையும் 
நிஜத்தில் ..
மனைவியையும் ..
இதயத்தில் 
சுமக்கும் ..
அப்பாவி ஜீவன்கள் ..

கவிதை .. பாசம் -- பிரபாஷ்கரன்


பிள்ளையின் ..
வருகைக்காக ..
காத்திருந்தாள்
கம்ப்யுட்டர்  முன் 
அம்மா ...

Friday, March 18, 2011

சிறுகதை : யதார்த்தம் -- பிரபாஷ்கரன்

எனது ப்ளாக்யை படித்து வரும் அனைவருக்கும் வணக்கம் . இந்த சிறுகதை நான் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது எழுதியது அப்போது இதை மூன்று பக்கங்களுக்கு எழுதியிருந்தேன் பல பத்திரிக்கைகளுக்கும் அப்போது அனுப்பி யாரும் போடவில்லை தற்போது அதை சில வரிகளில் சுருக்கி எழுதி நீங்கள் படிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் வெளியிட்டுளேன் நான் எழுதிய முதல் சிறுகதையை  பலவருடங்கள் ஆனாலும் வெளியிட்டதில் எனக்கு மகிழ்ச்சி .

வானம் லேசாக வெளுத்திருந்தபோது 'குடை ரிப்பேர் ..குடை ரிப்பேர் .' கத் தியவனை கூப்பிட்ட மரகதம் கிழிந்திருந்த குடையை தைக்க கொடுத்தாள்.. வாங்கி பேரம் பேசி அவனும் தைத்து கொடுக்கும் வேளையில் மழை தூறல் விழ ஆரம்பித்தது . தூறல் மேலும் வலுக்க காசை வாங்கி கொண்ட அவன் .
பழைய குடைகளை மடித்து சுற்றி வைத்திருந்த பிளாஸ்டிக் கவரை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டு 'குடை ரிப்பேர் ..குடை ரிப்பேர் .' கத்தியபடி வேகமாக நடையை விரைவாக்கினான் .

கவிதை : நானும் .. தவமிருக்கிறேன் . -பிரபாஷ்கரன்


காதல் ...
தெய்வீகமானதுதான் ..
உண்மை ..
அதனால்தான் ..
உன் ..
பார்வை தரிசனத்திற்காக ..
நானும் ..
தவமிருக்கிறேன் ..