நிறைய பேசுவோம்

Friday, March 18, 2011

சிறுகதை : யதார்த்தம் -- பிரபாஷ்கரன்

எனது ப்ளாக்யை படித்து வரும் அனைவருக்கும் வணக்கம் . இந்த சிறுகதை நான் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது எழுதியது அப்போது இதை மூன்று பக்கங்களுக்கு எழுதியிருந்தேன் பல பத்திரிக்கைகளுக்கும் அப்போது அனுப்பி யாரும் போடவில்லை தற்போது அதை சில வரிகளில் சுருக்கி எழுதி நீங்கள் படிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் வெளியிட்டுளேன் நான் எழுதிய முதல் சிறுகதையை  பலவருடங்கள் ஆனாலும் வெளியிட்டதில் எனக்கு மகிழ்ச்சி .

வானம் லேசாக வெளுத்திருந்தபோது 'குடை ரிப்பேர் ..குடை ரிப்பேர் .' கத் தியவனை கூப்பிட்ட மரகதம் கிழிந்திருந்த குடையை தைக்க கொடுத்தாள்.. வாங்கி பேரம் பேசி அவனும் தைத்து கொடுக்கும் வேளையில் மழை தூறல் விழ ஆரம்பித்தது . தூறல் மேலும் வலுக்க காசை வாங்கி கொண்ட அவன் .
பழைய குடைகளை மடித்து சுற்றி வைத்திருந்த பிளாஸ்டிக் கவரை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டு 'குடை ரிப்பேர் ..குடை ரிப்பேர் .' கத்தியபடி வேகமாக நடையை விரைவாக்கினான் .

கவிதை : நானும் .. தவமிருக்கிறேன் . -பிரபாஷ்கரன்


காதல் ...
தெய்வீகமானதுதான் ..
உண்மை ..
அதனால்தான் ..
உன் ..
பார்வை தரிசனத்திற்காக ..
நானும் ..
தவமிருக்கிறேன் ..



கவிதை தோற்று விட்டது என் காதல் ..-பிரபாஷ்கரன்



தோற்று விட்டது ..
என் காதல் ..
ஆனால்..
ஜெயித்து விட்டது ..
அவளின் ..
நினைவுகள் 


Thursday, March 17, 2011

கவிதை :திருடிகள் .. - பிரபாஷ்கரன்


பெண்கள் ...
சத்தமில்லாமல் ..
பார்வையால் ..
எங்கள் இதயத்தை 
திருடும் திருடிகள் ..

Wednesday, March 16, 2011

கவிதை எவரெஸ்ட் - பிரபாஷ்கரன்


எவரெஸ்ட் ..
கூட ..
தொட்டு விடும் ..
உயரம்தான் ..
ஆனால் ..
என்னவளின் ..
இதயம் .. மட்டும் ..

Tuesday, March 15, 2011

கவிதை : மும்தாஜ்களுக்காக ..-பிரபாஷ்கரன்


இன்றைய ...
மும்தாஜ்களுக்காக ..
நாங்களும் ..
கட்டுகிறோம் 
தாஜ்மஹால் ..
எங்கள் முகத்தில்தான் ...


கவிதை : அழகிய முகம் - பிரபாஷ்கரன்

இந்த கவிதை நான் கல்லூரியில்  படிக்கும் போது ஒரு பெண்ணை பற்றி எழுதியது இதை படித்து அந்த பெண் வெட்கப்பட்ட அழகே தனிதான் ...


பஸ்ஸில் ..
வியர்வை நெரிசலிலும்
வியப்புடன்..
திரும்பி பார்த்தேன் 
அவளை ..
வியப்பிற்கு 
காரணம் ..
அவளது ..
அழகிய முகமா 
உண்மையை 
சொன்னால் ..
அவள் ..
மேலுதட்டில் ..
சின்ன பூனை 
மீசையாம் ..