நிறைய பேசுவோம்

Wednesday, March 9, 2011

யாகம் நடந்த போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்

மதுரையில் ஒரு கோயிலில் யாகம் நடந்த போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் இது இந்த படத்தை பார்க்கும் போது உங்களுக்கு அந்த படத்தில் என்ன தோன்றுகிறது என பாருங்கள் .. கண்டிப்பாக கடவுளின் உருவம் தெரியும் என் கண்களுக்கு சிவனின் உருவம் தெரிந்தது பலரும் இதே கருத்தைத்தான்  தெரிவித்தனர் . பார்வைகள்  பலவிதம்தானே .. உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதையும் தெரிவியுங்கள் . படம் .. 

கவிதை : பார்க்காமல் ..சென்றுவிடு - பிரபாஷ்கரன்


அன்பே ...
வேண்டாம் ..
என்னை பார்க்காமல் ..
சென்றுவிடு ..
என்னை நீ பார்க்காவிட்டால் ..
இரவில்தான் உளறுவேன்
பார்த்து விட்டால் .
பகலிலும் கூட.. 

சிறுகதை : மனைவி - பிரபாஷ்கரன்

இந்த சிறுகதை நான் குமுதம் இதழில் எழுதி வெளி வந்தது 

இடைவேளையின் போது தன்னோட புது மனைவிக்கு ஐஸ் கிரிம் வாங்கிக் கொண்டு திரும்பிய கண்ணன் அதிர்ந்து போனான் .

அவன் மனைவியோடு அவள் சிரித்து சிரித்து பேசி கொண்டிருந்தாள் .

அவனை கண்டதும் புன்னகைத்த அவன் மனைவி " இவ அனிதாங்க என்னோட நெருங்கிய தோழி . சின்ன வயசிலிருந்து ஒன்றாகவே படிச்சோம். பாவம் நம்ம கல்யாணத்துக்கு அவளால் வர முடியலை  " சொல்லியவள் ...

"அனிதா இவர்தான் எங்க வீட்டுக்காரர் .விற்பனை பிரதிநிதியா இருக்கார் .."

அந்த நாள் அவனுக்கு நன்றாக நினைவில் இருந்தது .

"டேய் .. அட்டகசமான அயிடம்டா .. சும்மா டன்லப் பில்லோ மாதிரி மெத்தென்று பார்த்தாலே சூடு ஏறும்டா .." ரூமில் வந்து சொன்னான் ரவி .."

"அப்படியா சொல்லாதேடா அயிட்டத்தை மடக்கினியா.. ரேட் எவ்வளவு .."

"அதெல்லாம் எதுக்கு ? பாஸ்கர் ரூம்ல இருக்கா வா "

உடனே போய் அவளை அனுபவித்தது   நினைவிற்கு வந்தது.

இதை நம் மனைவியிடம் சொல்லிவிட்டால் என்றால் நம் மானமே போய்விடுமே.. என்ன செய்வது என்று அவன் நினைத்து கொண்டிருக்கும் வேளையில், " நீங்க கொஞ்சம் அனிதா கிட்ட பேசிக்கிட்டிருங்க .. நான் டாய்லெட் வரைக்கும் போயிட்டு வரேன் .. " அவன் மனைவி சொல்ல ..

கண்ணன் வயிற்றில் யாரோ பால் வார்த்தது போலிருந்தது. அப்போது அனிதாவே மெல்ல பேசினாள்.

"சார் .. சந்தர்ப்ப வசத்தால் என்னுடைய பிழைப்பு உடம்பை விற்று பிழைக்கும்படி ஆகிட்டது . ஆனால் உங்க மனைவிக்கிட்ட நான் நல்ல வேலை பார்ப்பதாக சொல்லிருக்கேன் . நானும் அவளும் சின்ன வயசிலேருந்து உயிருக்குயிரான சினேகிதிங்க .. இந்த விஷயம் தெரிஞ்சா அவள் தாங்கி கொள்ள மாட்டாள். தயவு செய்து என் சிநேகிதிக்கு தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள் ... விசும்ப ஆரம்பித்தாள்



Tuesday, March 8, 2011

மகளிர் தினம் -கவிதை -பிரபாஷ்கரன்


பெண்களே ...
ஒவ்வொரு  ஆணும் ..
தன்னுடைய ..
இதயத்தில் ..
சுமந்திருப்பது ..
ஒரு பெண்ணைத்தான் 
எனவே ...
எங்கள் இதயத்தில் 
இன்று மட்டுமல்ல 
என்றுமே ..
மகளிர் தினம்தான்..

Monday, March 7, 2011

சிறுகதை : காதல் செய்யும் மாயம் .. - பிரபாஷ்கரன்

 சிறுகதை : காதல் செய்யும் மாயம் .. - பிரபாஷ்கரன்

சிவா கத்திக் கொண்டிருந்தான..

.' 'என்னம்மா பொண்ணு இவ நாம் படிக்க வைத்து வேலைக்கு அனுப்பியது கண்டவனையும் லவ் பண்ணவா..... என்ன நினைசிட்டுருக்கா இவ மனசில தங்கச்சின்னு கூட பார்க்க மாட்டேன்... வெட்டி போட்டுடுவேன் ....'  நம்ம சாதி சனம் என்ன பேசும்.... 
 
            அப்போது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கரி..  சிவாவின் மனைவி கல்யாணம் ஆகி இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. ஒரே சாதியில் நடந்த திருமணம்....'

        '' என்ன இவன் கூட பிறந்த தங்கையின் மனதை புரிந்து கொள்ளாமல் இப்படி பேசுகிறானே மனதில் நினைத்துக் கொண்டாள்.
        உள்ளே சிவாவின் தங்கை அழுது கொண்டிருந்தாள். அப்போது சங்கரி உள்ளே வந்தாள்..

     அண்ணியை பார்த்தவுடன் கண்களை துடைத்து கொண்டாள். 

    '' அழாதே கண்ணை துடைச்சுக்கோ...காதலிக்கறது தப்பில்லை அதை அடைய போராட தெரியனும்...' அப்பதான் காதல் ஜெய்க்கும்....கவலைபடாதே நீ உள்ளே போ உங்க அண்ணன் வரார்...      

        உள்ளே வந்த சிவாவிடம் என்னங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்றாள்  சங்கரி....
       '' என்ன ...'' என்பது போல் பார்த்தான்.
        '' ஏங்க நான் உங்ககிட்ட ஒரு உண்மையை சொல்லணும்.. நம் திருமணத்திற்கு  முன்னாடியே நான் ஒருத்தரை லவ் பண்ணினேன். அவரும் என்னை விரும்பினார். ஆனால் எங்கள் வீட்டில் ஒத்து கொள்ளாமல் உங்களுக்கு  கல்யாணம் செய்து வச்சுட்டாங்க. எனக்கும் வீட்டில் எதிர்த்து போராட முடியாமல் உங்களை கல்யாணம் செய்துகிட்டேன்.
   
   கேட்ட அவனின் பார்வையில் உக்ரம் தெரிந்தது.
 '' காதல்னா எதுவரைக்கும் பழகினிங்க.. வேற என்ன நடந்தது... வயித்தை கழுவிட்டு எனக்கு மனைவி ஆகலையே.. என்னை ஏமாத்திட்டியேடி ...'' அவனின் வக்கிரமான பேச்சுக்கள் அவளை தாக்கின..
  
    சிரித்தாள் சங்கரி..  '' வெல் சிவா.. எப்படி கேவலமா பேசுறிங்க...'' இதே நிலமை... உங்க தங்கைக்கு  வராதுன்னு என்ன நிச்சயம்  நீங்கள் பார்க்கும் மாப்பிள்ளை மட்டும் எப்படி சம்மதிப்பான் அவரும் உங்களை மாதிரி சராசரி ஆம்பிளையா இருந்தா ....  நாளைக்கு உங்க தங்கச்சி காதல் விவகாரம் தெரிந்து அவளை வீட்டிற்கு அனுப்பிட்டா...
  
        சிவாவிற்கு நெற்றி பொட்டில் அடித்தது போல் இருந்தது ... ''ஆம்...நம் தங்கை கண்டிப்பாக வரப்போகும் கணவனிடம் அவள் காதலை பற்றி சொல்லிவிடுவாள் ... வரப்போறவன்  எப்படி இருப்பானோ ... சங்கரி சொல்வதும் சரிதான்.. அவள் விருப்பபடி செயதால் சந்தோசமாக இருப்பாள்..என்ற எண்ணத்துடன் அவன் தங்கையை பார்த்தான்

அரசியல் காதலி


இது நாட்டில் நடக்கும் அரசியல் கூட்டணி நாடகங்களை  பார்க்கும்போது ஏற்பட்ட கவிதை

அன்பே ...
நீ என்ன ..
அரசியல்வாதியா ...
நேற்று ...
என்னை காதலித்தாய் ..
இன்று யாரையோ ...
காதலிக்கிறாய் ...
நாளை ..
யாரையும் காதலிப்பாய்
உனக்கு ..
தேவை மனம் 
அல்ல பணம்தானே

Saturday, March 5, 2011

போட்டி போட்டு 13 ரம் பாட்டில் குடித்த இருவர் சாவு ...!


இன்று என்னை மீண்டும் வருத்தம் மற்றும் கோபமடைய செய்தியை செய்திதாளில் படித்தேன் .இது எனக்கு மிகுந்த கோபத்தை ஏட்படுத்திய செய்தி ஆகும்
.
இது நடந்தது தமிழ்நாட்டில் மேட்டுர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை முன்பு. இரு நபர்கள் இடையே போட்டி எதில் தெரியமா யார் அதிகம் குடிப்பது என்பதில் இருவரும் போட்டி போட்டுகொண்டு 13 குவார்டர் ரம் பாட்டில்களை தண்ணீர் எதுவும் கலக்காமல் வாங்கி குடித்து கடைசியில் உயிரை விட்டுருக்கிறார்கள். .மடையர்கள் அவர்கள் குடும்பம் என்னாவது கொஞ்சமாவது நினைத்து பார்த்தார்களா இது போன்ற ஜென்மங்கள் இருந்து என்ன பயன் என்று நினைக்க தோன்றினாலும் அவர்கள் குடும்பத்தை நினைத்து வருத்த படவேண்டியுள்ளது  எதில்தான் போட்டி என்று விவஸ்தை இல்லையா .. என்னுடைய ஆதங்கத்தை உங்களோடு பகிர்ந்து கொண்ட சிறிய திருப்தியோடு விடை பெறுகிறேன் ..

 it