நிறைய பேசுவோம்

Friday, February 25, 2011

ஆங்கில மோகம் .. தமிழுக்கு வீழ்ச்சி

பாருங்கள் இந்த விளம்பரத்தை பார்த்தவுடன் என்ன தோன்றுகிறது .இப்படியும் நம் நாட்டில் நடக்கிறதே ... pre KG யில் குழந்தைகளை சேர்ப்பதற்கு முதல நாள் இரவே  விண்ணப்பம் வாங்க  பிரபல பள்ளிகளில் வரிசையில் காத்திருக்கும்  மக்கள் அதிகம் . காரணம் ஆங்கில மோகம்,  பள்ளிகளில் ஆங்கில கல்வி முறையில்   சேர்க்க   தனியார்   பள்ளிகூடங்களுக்கு   நன்கொடையாக கொட்டிகொடுக்கும் பலரும் கல்லூரியில் சேர்க்கும் போது  அரசு கல்லூரியில் சேர்க்கவே  விரும்புகின்றனர் .இதற்கு காரணம்  அரசு  பள்ளிகளின் தரம் குறைந்து  காணப்படுவதுதான்  அதே சமயம் அரசு   கல்லூரிகளின்   தரம் உயர்ந்துள்ளது .எனவே அரசு பள்ளிகளின் தரம் முதலில் உயரவேண்டும் . மேலே கண்ட விளம்பரத்தின் வளர்ச்சி தமிழுக்கு வீழ்ச்சியாக முடிந்து விடும் அபாயம் உள்ளது எனவே அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துங்கள் .. உயர்த்துங்கள்.. உயர்த்துங்கள்

Thursday, February 24, 2011

கண்களுக்கு

இந்த கவிதை நான் கல்லூரியில் படிக்கும் போது 'பாக்யா' புத்தகத்தில் நான் எழுதி வெளி வந்ததது  இந்த கவிதை பெரும் வரவேற்பையும் பெற்றது .

அன்பே ...
என் கண்களுக்கு ..
என்ன லஞ்சம் ..
கொடுத்தாய் ..
உன்னையே .. 
சுற்றி வருகிறது ...




விசிறி...


அவள் ...
விசிறியது இமைகளைத்தான்  ..
ஆனால் ...
வியர்த்தது ...
என் விழிகளுக்கல்லவா..! 


காதல் பிச்சைக்காரன்


அவள் ...
சிரிக்கும் போதெல்லாம் ..
சில்லரைகளை  ..
பொறுக்கி.. பொறுக்கி..
இதோ ..
நானும் ... 
காதல் பிச்சைக்காரனாக 
 



Wednesday, February 23, 2011

மனதை காயப்படுத்தாதீர்கள்


இன்று நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளும் விஷயம் என் மனதை மிகவும் பாதித்தது.

நான் சந்தித்த ஒரு சிலர் தான் மட்டுமே புத்திசாலி என்று நினைத்து கொள்கிறார்கள் நினைக்கட்டும் தப்பில்லை ஆனால் மற்றவர்கள் அனைவரும் புத்திசாலிகள் இல்லை என்று நினைகின்றனர் (மற்றவர்கள் முட்டாள் ) .அதோடு இல்லாமல் அடுத்தவர்களை மட்டம் தட்டுவது மற்றவர்கள் எந்த செயல் செய்தாலும் அதை மட்டம் தட்டி பேசுவது .இந்த மனப்பான்மை இருப்பவர்களோடு நாம் பழகுவதுதான் தவறு என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்  சொல்லுங்கள் மகிழ்ச்சி அடைவேன் .

இன்னும் சொல்லபோனால் லாட்டரி போன்ற அதிர்ஷ்ட போட்டிகளில் நம்  கண்ணுக்கு தெரியாத எத்தனையோ பேருக்கு பரிசு கிடைக்கிறது . ஆனால்   நம் அருகில் இருக்கும் நண்பருக்கோ பக்கத்துக்கு வீட்டில் இருப்பவர்களுக்கோ  சிறிய பரிசு கிடைத்தால் கூட அதை பாரட்டும் மனப்பான்மை நம்மில் பெரும்பாலோருக்கு இல்லை இந்த நிலைமை மாறவேண்டும் என்பதே என் ஆசை 

முக்கியமாக ஆணவமும்,  தான் என்ற அகம்பாவமும்   என்றுமே நமக்கு நன்மை செய்யாது இதை புரிந்து கொள்ளவேண்டியது  காலத்தின் கட்டாயம் என்பதே உண்மை 

இது நான் சமீபத்தில் சந்தித்த சில நபர்களினால் ஏற்பட்டது இதை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் எனக்கு ஒரு மனதிருப்தி ..இதற்கு ஒரு தீர்வு சொன்னீர்களானால் மகிழ்வேன் . நன்றி 


தீபாவளி


எங்கள் வீதியில் ..
மட்டும் ..
தினந்தோறும் தீபாவளி 
ஆம் ...
என்னவளின் ..
மத்தாப்பு புன்னகையால் ..


Tuesday, February 22, 2011

விஷம் அருந்தி உயிரை மாய்த்து கொண்டுள்ளனர்

கணவர் "செக்ஸ் டார்ச்சர்': குடும்பமே தற்கொலை  என்ற இந்த செய்தியை பார்த்தவுடன் மனது பதை பதைத்தது இது நம் தமிழ் நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் நடந்துள்ளது இது இன்றைய பத்திரிக்கை செய்தி . கணவன் குடித்து விட்டு வந்து இவ் வாறு கொடுமை படித்தியதால் அந்த பெண் தாய்,தந்தை ஆகியோர் விஷம் அருந்தி தங்கள் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர் இது எவ்வளவு கொடுமையான விஷயம் கணவனே செக்ஸ் டார்ச்சர் கொடுத்தால் அந்த பெண் என்ன செய்வாள் உலகம் அறிவியல் வளர்ச்சி எவ்வளவு அடைந்தாலும் இது போன்ற நிகழ்வுகள் நடந்துதான் வருகின்றன ,இங்கும் காவல் நிலையத்தில் கவுன்சிலிங் நடந்திருக்கிறது அதன் பிறகே இந்த நிகழ்வு ஒரு வேளை மனோதத்துவ நிபுணர் மூலம் கவுன்சிலிங் நடந்திருத்தால் முடிவு மாறியிருக்கலாம் தெரியவில்லை நடந்த பிறகு அப்படி இருக்கலாம் என்று காரணம் சொல்வது சரியில்லை இருந்தாலும் இது மாதிரியான நிகழ்வுகள் நடக்காமலிருக்க சமூக ஆர்வலர்கள் முயற்சி செய்ய   வேண்டும் என்பதே என் விருப்பம் காலை பேப்பரில் இந்த செய்தியை பார்த்தவுடன் மனது வலித்தது . 

உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் இதை வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறேன் 

செய்தியில்  நான் படித்த சம்பந்த பட்ட நபர்களின் பெயர்களை நான் இங்கு வெளியிடவில்லை என்பதை விட வெளியிட  விரும்பவில்லை என்பதே உண்மை