நிறைய பேசுவோம்

Tuesday, February 22, 2011

தாஜ்மஹால்

 
நான் ..
கட்ட போகும் ..
தாஜ்மஹாலுக்கு 
கற்கள் தேவையில்லை ..
என்னவளின் ...
இதயம் ..
மட்டுமே போதும் 

நினைவுகள்



பூக்கள் மட்டும் ...
மலர்வதில்லை ...
நினைவுகளும்தான்...
என்னவொன்று பூக்கள்
வாடி விடுகின்றன
ஆனால்...
நினைவுகள் என்றுமே
வாடுவதில்லை

சங்கீதம்


அன்பே ..
மெல்ல மெல்ல 
நடந்து வாயேன் ..
உன் கால்கள் ..
இசைக்கும் சங்கீதத்தை ..
என் காதுகளும் ...
கேட்கட்டும் ..


Monday, February 21, 2011

அவளின் நினைவுகள் ..


இதோ ...
முன்னுக்கு ..
வந்து விட்டேன் ..
நான்..
ஆனால்..
தூரத்தே கொஞ்சம் 
பசுமையாய் ...
அவளின் நினைவுகள் ..



சச்சின்


போதும் ...
நிறுத்திக் கொள்...
நீ வீசும் ..
பார்வை பந்துகளை 
தடுத்தாடுவதற்கு  ..
நான் ஒன்றும் ..
சச்சின் அல்ல ...


சுதந்திரம்

இந்த கவிதை நான் எழுதி வாரமலர் இதழில் வெளியானது உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி .

கம்பி .. கூண்டிற்குள் 
சின்ன புறாக்கள் 
சுதந்திர தினத்தன்று 
பறக்க விடுவதற்கு ..



Sunday, February 20, 2011

முகம் சுளிக்க வைத்த காதலர்கள்

இன்று விடுமுறை ஆதலால் குடும்பத்துடன் வெளியில் செல்ல திட்டமிட்டு மதுரையில் புகழ் பெற்ற நாயக்கர் மஹால் சென்றோம் . அங்கு நாங்கள் கண்ட காட்சிகள்  முகம் சுளிக்க வைத்தன காரணம் ஜோடி ஜோடியாக காதலர்கள் 
முத்தமிட்டுகொண்டும் சில்மிஷம் செய்துகொண்டும் இருந்தனர் அவர்கள் யாரை பற்றியும் பொருட்டாக கருதவில்லை நீங்கள் கேட்கலாம் அவர்களை ஏன் நீங்கள் பார்க்கவேண்டும் என்று .. நியாயமான கேள்விதான் ஆனால் அவர்கள்  எந்த    மறைவிடத்திலும்   இந்த     செயலை   செய்யவில்லை .. 
எல்லோரும் பார்க்கும் இடத்தில்தான் இந்த செயல்கள் .. சரி என்று பூங்காவிற்கு சென்றோம் அங்கும் இதே காட்சிகள்தான் .

இங்கு நான் காதலர்களை குறை சொல்லவில்லை காரணம் அவர்களுக்கு சந்திக்கும் இடம் இல்லை ..

அப்போதுதான் எனக்கு ஒன்று தோன்றியது எல்லா ஊர்களிலும் காதலர் பூங்கா என்று ஒன்று அமைத்து கொடுத்துவிட்டால் அங்கு அவர்கள் மட்டும் சந்தித்து கொள்வார்கள்  காதலர்களை தவிர வேறு யாருக்கும் அங்கு அனுமதி கொடுக்க கூடாது . ஏனெனில் மற்ற இடங்களுக்கு பொதுமக்கள் குடுமபத்துடன் குழந்தைகளை நிம் மதியாக கூட்டி சென்று வரலாம் இல்லையா ..

இது சரியா என்பதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் .. நன்றி