யாரையாச்சும் பிடிக்கலேன்னா நல்லாருக்குன்னு சொல்லி பார்க்க வைச்சிடுங்க. படத்தில் திருப்பம் இருக்கலாம் படம் பூரா திருப்பம் இருந்தா கஷ்டம்தான். சன் நெக்ஸ்ட்ல இருக்கு
செலவில்லாமல் ஒரு சின்னகதையை சூப்பரா சொல்லியுள்ளார் இயக்குநர். ஆம்புலன்சில் கொண்டு செல்லப்படும் ஒரு டெட் பாடியை வைத்து கதை படத்தின் பலம் நடித்தவர்கள் அனைவருமே..பார்க்கலாம் அமேசானில் இருக்கு
Saturday, October 12, 2024
மற்றுமொரு ஜாதி பற்றிய படம்.கிராமங்களில் இன்னும் இப்படி நடக்கிறதா தெரியவில்லை ரிசர்வ் தொகுதியாக மாற்றிய பிறகும் டம்மியா ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கும் பாலாஜி சக்திவேல். சினிமாவில் மட்டுமே சாத்தியமாகிறது எனும் வசனங்கள். என்ன சாவு வீட்டு காட்சிகளை ஒவரா காட்சி படுத்துவதால்ன்மியூட் செய்து பார்க்க வேண்டியுள்ளது அது என் வழக்கம் எப்போதும். படத்தில் சசிக்குமாரை விட அதிகம் ஸ்கோர் செய்வது பாலாஜி சக்திவேல்தான். அமேசானில் இருக்கிறது
என்னடா இந்திப்படம்னு பார்த்தா அங்கும் ஜாதியை மையப் படுத்திய படம் கீழ்ஜாதி பெண்ணின் போராட்டம் அவருக்கு ஹீரோ ஜான் ஆப்ரகாமின் உதவி இன்னும் டி ஆர் எத்தனை கத்தி குத்து வாங்கினாலும் பேசுவாரே அது போல் ஜான் ஆப்ரகாம் பேசுவதெல்லாம் ஒவர். அவருக்கும் வயசாயிடுச்சு தூம்ல எப்படியிருப்பார். போரடிச்சா பார்க்கலாம். சூப்பர்னு சொல்ல முடியாது மோசமில்லை ஜீ ஒடிடில இருக்கு..
நேற்று மஹாளய பட்ச அமாவாசை முன்னிட்டு என் சகலை அவர்கள் கட்டியுள்ள புதுப்பட்டி கத்தரிக்காய் சித்தர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றேன் அன்னதானம் சிறப்பாக நடை பெற்றது திரும்பி வரும்போது அலங்கா நல்லூரில் பால் பன் வேண்டும் என அனைவரும் கேட்க காரை நிறுத்தி விட்டு மாப்பிள்ளை இறங்கி அந்த பக்கம் கடையில் வாங்க சென்றார் காரில் அமர்ந்திருந்த என்னை பார்த்து கடைக்காரார் ஏதோ பேச எனக்கு புரியல அப்போ போன் செய்து அங்க்கிள் உங்க ஸ்டுடண்டா என்று சொல்லவும் இறங்கி கடைக்கு சென்றேன். சார் நான்கார்த்திக் சார் ஐடி படித்தேன் என்றார் பேஷ்ப்புக்கில் நான் எழுதுவது எல்லாமே படிப்பதாகவும் இடையில் ஒரு முறை மெசஞ்சரில் நம்பர் வாங்கியதை குறிப்பிட்டார் பங்கு சந்தை பற்றி பேசனும் என்றார். தாராளமா வீட்டிற்கு போன் செய்து விட்டு வரும்படி முகவரி கொடுத்தேன். நம் முந்நாள் மாணவர்களை சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சிதான்.மகிழ்ச்சிகள் தொடரட்டும். பி.கு. டீ சாப்பிட்டே ஆக வேண்டும் என்று சொல்லி மாஸ்டரிடம் டீ போட சொல்லி சாப்பிட வைத்துதான் அனுப்பினார். அன்பு எப்போதுமே பெரிது அதுவும் நம் மாணவர்களின் அன்பு கொஞ்சம் கூடுதல் இனிமையான சுவாமி தரிசனத்துடன் இந்த சந்திப்பும் இனிமையாகத்தான் இருந்தது
ஏனோ பல நாள் பார்க்கனும்னு நினைக்கல. சரி என்னதான் படம்னு பார்க்க ஆரம்பித்தேன். இயக்குனர்தான் ஹீரோ போல சிம்பு சாயலில் நல்ல நடிப்பு சேத்தனும் நல்ல நடிப்பு கூத்து கலை அதில் ஒரு காதல் இது போன்ற படங்களை எடுக்கவும் ஒரு கட்ஷ் வேண்டும். பார்க்கலாம் வித்தியாசமான படம் பாருங்கள்
என்னா ஒரு பேச்சு மனிதனுக்கு ஏன் வெற்றி தொடர்ந்து கிடைக்கிறது என்பது இப்போதுதான் புரிகிறது .எல்லோருமே கீழே விழுவோம் ஆனாலும் உடன் எழுந்திருப்பது என்பதை ரஜினியை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் யாருடைய பெயரையும் பேசும்ன்போது விட்டு விடுவதில்லை வேட்டையன் சூப்பர் ஹிட் ஆகட்டும் பார்போம்.