Pages
▼
Saturday, June 4, 2011
கவிதை : உன்னை மறந்து விடுவேன் உரிமையோடு - பிரபாஷ்கரன்
அன்று ..
உன்னை .
முதன் முதலில்
பார்த்த போது
பரவசம் ..
பச்சை சட்டையில்
நீ.
உன்னை
காதலுடன் .
நீ வரும்
கோயிலுக்கு
நானும் ..
வந்தேன் ..
எப்படி ..
பைத்தியமானேன்
உன் மீது
பச்சை மை
பேனா வாங்கி
பச்சை கலர்
நோட்டு வாங்கி
கிறுக்கினேன்
என் மனதை
அது கவிதையா
தெரிய வில்லை
இதோ ..
இன்றும் ..
பிறந்த நாள்
கொண்டாடுகிறேன்
உன்னை ..
முதன் முதல்
பார்த்த ..
அந்த நாளை
பச்சை
புது
சேலை அணிந்து
காலம் ..
வெகு தூரம்
சென்று விட்டது
நேற்று ..
உன்னை நினைத்தேன்
உரிமையோடு
இன்று ..
உன்னை
நினைக்கிறன்
உரிமை இல்லாமல்
நாளை.
உன்னை
மறந்து விடுவேன்
உரிமையோடு
Friday, June 3, 2011
Thursday, June 2, 2011
Wednesday, June 1, 2011
200 வது பதிவு -கவிதை :நிழல் நிஜமாகிறது -பிரபாஷ்கரன்
இது எனது 200 வது பதிவு 2011 பெப்ரவரி இல்தான் வலைத்தளம் துவங்கினேன் .விரைவாக 200 வது பதிவு போடுவதற்கு காரணம் உங்கள் அன்பும் ஆதரவும் .முக்கியமாக நான் நன்றி சொல்லவேண்டியது தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் என்னை தொடர்பு கொண்டபோது பல ஆலோசனைகள் வழங்கினார். இன்னும் சிறப்பாக பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆசை முடியும் என்று நம்புகிறேன் .இந்த பதிவிற்கு என்ன கவிதை எழுதலாம் என்ற போது face book இல் இந்த புகைப்படம் நண்பர் மூலமாக கிடைத்தது அருமையான புகைப்படம் நீங்களும் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு படமும் கவிதையும் .படத்தை கூர்ந்து கவனியுங்கள்
அன்பே ..
உன்
பார்வைக்காக
ஏங்கி ..
நானும்
தொடர்கிறேன்
நிழல் போல்
தொடரும்
எனக்கு
நிழலில்
தரப்போகும்
இந்த முத்தம்
நிஜமாகும்
நாளை
எண்ணி ..
இதோ நானும்
உன்னை நோக்கி
Tuesday, May 31, 2011
Monday, May 30, 2011
சுவாமி நடராஜர் படத்தை பெண்கள் ஆடை வடிவமைப்புக்கு பயன் படுத்தி இருக்கிறார்
மீண்டும் மனிஷ் அரோரா என்பவர் சுவாமி நடராஜரர் படத்தை பெண்கள் ஆடை வடிவமைப்புக்கு பயன் படுத்தி இருக்கிறார் .தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகள் எப்படி நடை பெறுகின்றன .இவர் இந்தியர் என்றும் கூறபடுகிறது அவர் பெயரை பார்த்தால் இந்து என்று தான் தோன்றுகிறது பின் எப்படி .. இதை உங்களிடம் தெரியபடுத்துவது உங்கள் கருத்துகள் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே










